கொரோனா அச்சம் தீரும்வரை தேர்தல் நடத்தவே முடியாது – ம.தேசப்பிரிய

தேர்தல்‌ திகதி குறித்து விமர்சனங்களை முன்வைக்க முன்னர்‌ பொதுத்‌ தேர்தலை நடத்த முடியுமா என்பதே இன்னமும்‌ சந்தேகமாக உள்ளது. கொரோனா வைரஸ்‌ தொற்றுநோய்‌ பரவல்‌ குறித்த சந்தேகம்‌ நீங்கும்‌ வரையில்‌ தேர்தலை நடத்த மாட்டோம்‌ என தேர்தல்கள்‌ ஆணைக்குழுவின்‌ தலைவர்‌ மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்‌. பகுதிபகுதியாக தேர்தலை நடத்தசாத்தியப்பாடுகள்‌ இல்லை,

அவ்வாறான ஆலோசனைகள்‌ முன்வைக்கப்பட்டாலும்‌ சகல கட்சிகளின்‌ நிலைப்பாட்டினை ஆராயவேண்டும்‌ எனவும்‌ கூறுகின்றார்‌.

பொதுத்‌ தேர்தல்‌ குறித்து அரசியல்‌ ரீதியாக முரண்பாடுகள்‌ எழுந்துள்ள நிலையில்‌ தேர்தல்‌ நடத்துவது குறித்து தேர்தல்கள்‌ ஆணைக்குழு இன்னமும்‌ உறுதியான நிலைப்பாட்டினை கொண்டிராத நிலையில்‌ அது குறித்து தெளிவுபடுத்துகையில்‌ தேர்தல்கள்‌ ஆணைக்குழுவின்‌ தலைவர்‌ இவற்றை கூறினார்‌.

இது குறித்து அவர்‌ மேலும்‌ கூறுகையில்‌,

பொதுத்‌ தேர்தல்‌ குறித்து தேர்தல்கள்‌ ஆணைக்குழுவிடம்‌ பல தரப்பட்டவர்கள்‌ பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்‌. எனினும்‌ தேர்தல்‌ நடத்துவதா இல்லையா என்பதை நாம்‌ தெரிவிக்க முன்னர்‌ நாட்டின்‌ நிலைமை எவ்வாறு உள்ளது, மக்கள்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றுநோய்‌ தாக்கத்தில்‌ இருந்து விடுபடக்கூடிய சாத்தியங்கள்‌ முழுமையாக உள்ளதா, மக்களால்‌ நம்பிக்கையுடன்‌ தேர்தலில்‌ வாக்களிக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள்‌ எமக்கு சான்றிதழ்கள்‌ வழங்க வேண்டும்‌. மேலும்‌ தேர்தலை நடத்துவதென்றால்‌ இம்முறை சுகாதார அதிகாரிகளின்‌ ஆலோசனைக்கு அமையவே நடத்த முடியும்‌. சுகாதார பாதுகாப்பு விடயத்தில்‌ பாரிய அச்சம்‌ உள்ள காரணத்தினால்‌ அவர்கள்‌ என்ன கூறினாலும்‌ அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்‌.

அத்துடன்‌ பகுதி பகுதியாக தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்த கருத்துக்‌களும்‌ முன்வைக்கப்படுகின்றது. ஆனால்‌ பகுதி பகுதியாக தேர்தலை வைக்க சாத்தியப்பாடுகள்‌ இல்லை, அவ்வாறு நடத்துவதாக இருந்தாலும்‌ கூட சகல அரசியல்‌ கட்சிகளுடனும்‌ கலந்துரையாடி அவர்‌களின்‌ இணக்கப்பாட்டுடன்‌ தீர்மானம்‌ எடுக்க வேண்டும்‌. தேர்தலை பகுதபகுதியாக நடத்துவது குறித்து இப்போது வரையில்‌ எந்த கோரிக்கையும்‌ முன்‌வைக்கப்படவில்லை.

அதேபோல்‌ பகுதி பகுதியாக தேர்தலை நடத்தினாலும்‌ முடிவுகளை ஒரு நாளிலேயே வழங்க முடியும்‌. பகுதி பகுதியாக தேர்தல்‌ முடிவுகளை அறிவிக்க முடியாது. அவ்வாறு தேர்தல்‌ முடிவுகளை அறிவித்தால்‌ அது ஒருவிதத்தில்‌ அரசியல்‌ ரீதியிலான அழுத்‌தங்களை பிரயோகிக்க மற்றும்‌ தேர்தல்‌ சுயாதீனதில்‌ தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும்‌. ஒரு தரப்பினர்‌ இதில்‌ பாதிக்கப்படும்‌ வாய்ப்புகளும்‌ உள்‌
ளது. எனவே தேர்தல்‌ முடிவுகளை ஒரு நாளில்‌ அறிவிக்கவே முடியும்‌

அதேபோல்‌ மாகாணசபை தேர்தலை போல வெவ்வேறு தினங்களில்‌ பொதுத்‌தேர்தலை நடத்த முடியாது. கடந்த காலங்களில்‌ நெருக்கடிகள்‌ இருந்த காலத்‌திலும்‌ தேர்தலை நடத்தியதாக சிலர்‌ கூறுகின்றனர்‌. உண்மைதான்‌, ஆனால்‌ அப்போதெல்லாம்‌ எதிரி யார்‌, சமாளிக்க என்ன செய்ய வேண்டும்‌ தீர்வு ஒன்றுக்கு வருவதற்காக இவற்றையெல்லாம்‌ செய்ய மூடியும்‌ என இருந்தது.

ஆனால்‌ இப்போதைய சூழ்நிலை அவ்வாறு அல்ல. யார்‌ எதிரி என கண்ணுக்கு தெரியவில்லை. தாக்கம்‌ எவ்வாறானது என்பதை கண்‌டறியவும்‌ முடியாதுள்ளது. அதுமட்டுமல்ல பாராளுமன்ற தேர்தல்‌ ஒன்றினை நடத்தும்‌ வேளையில்‌ 55 வீதமளவில்‌ வாக்குகள்‌ பதியப்படுவது போதுமானது என கூற முடியாது. குறைந்த பட்சம்‌ 70 வீதமான வாக்குகளையேனும்‌ மக்கள்‌ பிரயோகித்திருக்க வேண்டும்‌. இப்போதுள்ள நிலையில்‌ அது சாத்தியமில்லை,

அதுமட்டும்‌ அல்ல முதலில்‌ தேர்தலை நடத்தினால்‌ தானே வாக்களிப்பு வீதம்‌ பதிவாகும்‌. முதலில்‌ தேர்தல்‌ நடைபெுகின்றதா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. கொரோனா வைரஸ்‌ தொற்‌துநோய்‌ பரவல்‌ முதலில்‌ முற்றுமுழுதாக நாட்டில்‌ இருந்து நீக்கப்பட வேண்டும்‌. அதற்கான வேலைகளை முதலில்‌ முூன்னெடுக்கட்டும்‌. பின்னர்‌ தேர்தல்‌ குறித்து பார்க்கலாம்‌. கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தலுடன்‌ தேர்தலை வைக்கமாட்டோம்‌. சுகாதார அதிகாரிகள்‌ கூறும்‌வரையில்‌ எமது பக்கம்‌ எந்த தீர்மானமும்‌ எடுக்கப்படாது. ஒரு சிலர்‌ கூறுவதை கேட்டு மக்களை நெருக்கடிக்குள்‌ தள்ளமாட்டோம்‌ என்றார்‌.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page