பள்ளியில் கூட்டு தொழுகைக்கு அனுமதி பெற முயற்சி

ஏனைய ஐவேளை தொழுகைகளையும் கூட்டாக தொழுவது தொடர்பில் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும். ‘கூடிய விரைவில் மாற்றம் வரும்’ என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் தெரிவித்தார்.

கூட்டுத் தொழுகைகள் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இந்தக் கட் டுப்பாடுகள் முஸ்லிம் சமூ கத்துக்கு மாத்திரம் விதிக்கப் படவில்லை. கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத் திரமே கூட்டு வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பௌத் தர்கள் நோன்மதி தினங்களில் கூட்டு வழிபாடுகளை மேற் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் சுற்று நிருபம் தெரிவித்துள்ளது. எனவே முஸ்லிம்கள் தமக்கு மாத் திரம் விடுக்கப்பட்ட விதிமு றைகள் என்று எண்ணக்கூடாது என்றார்.

இதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் MRCA/A/1/62 எனும் இலக்க 2021.10.25 ஆம் திகதியிடப்பட்ட சுற்று நிருபமொன்றினை வெளியிட்டுள்ளது. அச்சுற்று நிருபம் அனைத்து பள்ளிவாசல் நம் பிக்கை பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 23.10.2021 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள DGHS COVID 19 /347/2021 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவேண்டுமென கோரப்பட்டுள்ளது. பின்வருமாறு வழிகாட்டல்கள் அமைந்துள்ளன.

– பள்ளிவாசல்களில் எந்த நேரத்திலும் அதிக பட்சமாக 50பேர் மாத்திரம் தனியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

– வெள்ளிக்கிழமைகள் ஜும்ஆ தொழுகையை மாத்திரம் கூட்டாக 50பேர் தொழுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும். ஜும்ஆ ஒரு அமர்வு மாத்திரமே அனுமதிக்கப்படும்.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

– பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமா அத் தொழுகைகள், ஜனாஸா தொழுகை, குர்ஆன் மஜ்லிஸ், நிக்காஹ் மஜ்லிஸ் போன்ற கூட்டு செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

– முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல் சொந்தமாக தொழுகை விரிப்பினை எடுத்து வரல், வீட்டில் இருந்து வுழூச் செய்து வரல் கட்டாயமாகும்.

– ஹவ்ழ் மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளிவாசல் நுழை வாயிலில் சவர்க்காரமிட்டு கைகழுவுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கைலாகு செய்தல், கட்டித்தழுவுதல் அல்லது உடல் ரீதியான வேறு ரீதியான வாழ்த்துக்கள், தொடுகைகள் அனுமதிக்கப்படவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் அனுப்பி வைத்துள்ள சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளார். (விடிவெள்ளி 28-10-2021)