ஞானசார தேரருக்கு புதிய பதவி வழங்கினார் ஜனாதிபதி !

ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

ஒரே நாடு ,ஒரே சட்டம் என்ற விடயதானத்தினை, ஆராய்ந்து சட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய சிபாரிசுகளை செய்ய இந்த செயலணி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த செயலணியில் முஸ்லிம் உறுப்பினர்கள் நால்வர் சேர்க்கப்பட்ட போதிலும் தமிழர்கள் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதியின் செயலாளர் விசேட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார். மேலும்..

அதன்படி இந்த ஜனாதிபதி செயலணியில் உள்ளடங்குவோரின் பெயர் விபரங்கள் வருமாறு:
1. கலகொடஅத்தே ஞானசார தேரர் ( தலைவர்)
2. பேராசிரியர் தயானந்த பண்டார
3. பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன
5. என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன
6. சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே
8.  எரந்த நவரத்ன
9.  பாணி வேவல
10. மௌலவி மொஹொமட் (காலி உலமா சபை)
11. விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப்
12. கலீல் ரஹூமான்
13. அஸீஸ் நிசார்தீன்

-தமிழன்.lk

Read:  விசாரணை அறிக்கையை வெளியிட்டால் சூத்திரதாரி யார் என தெரிந்துகொள்ளலாம் - ஹலீம் MP