அடையாள அட்டை ஒரு நாள் சேவை – தொலைபேசி இலக்கங்கள்

ஒரே தினத்தில்‌ அடையாள அட்டையை விநியோகிக்கும்‌ ஒரு நாள்‌ சேவைகள்‌ நேற்று முதல்‌ ஆரம்‌பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம்‌ தெரிவித்துள்ளது.

நாட்டில்‌ நிலவிய கொரோனா வைரஸ்‌ பரவல்‌ சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மேற்படி ஒருநாள்‌ சேவையை நேற்று முதல்‌ மீள ஆரம்பித்துள்ளதாக திணைக்களம்‌ தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பத்தரமுல்லையில்‌ உள்ள பிரதான அலுவலகத்திலும்‌ தென்மாகாண அலுவலகத்திலும்‌ அடையாள அட்டையைப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ ஒரு நாள்‌ சேவையை பெற்றுக்கொள்ள முடியும்‌ என்றும்‌ திணைக்களம்‌ தெரிவித்துள்ளது. ஒரே நாளில்‌ அடையாள அட்‌டையைப்‌ பெற்றுக்கொள்ள விண்‌ணப்பிப்போர்‌ தமது விண்ணப்பப்‌ பத்திரத்தை கிராம சேவை அதிகாரியின்‌ சான்றுப்படுதலின்‌ பின்னர்‌ சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில்‌ உள்ள தேசிய அடையாள அட்டை கிளையில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்றும்‌ திணைக்களம்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளது.

அதேவேளை ஒரு நாள்‌ சேவை ஊடாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள அலுவலகத்‌துக்கு வருவோர்‌ அதற்கு முன்‌பதாக தமக்கான தினத்தையும்‌ நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்வது அவசியம்‌ என்றும்‌ அந்தத்‌ திணைக்‌களம்‌ தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பிரதான அலுவலகத்துடன்‌ தொடர்பு கொள்ள 0115226126, 0115226100 என்ற தொலைபேசி இலக்கத்தை உபயோகப்படுத்த முடியும்‌. அத்துடன்‌ தென்மாகாண அலுவலகத்‌துடன்‌ தொடர்பு கொள்ள 0912228324, வடமேல்‌ மாகாண அலுவலகத்துடன்‌ தொடர்பு கொள்ள 0372224337, கிழக்கு மாகாண அலுவலகத்துடன்‌ தொடர்பு கொள்ள 0652229449, வடமாகாண அலுவலகத்துடன்‌ தொடர்பு கொள்ள 024 2227201 ஆகிய தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்‌ என்றும்‌ திணைக்களம்‌ தெரிவித்துள்ளது.

லோரன்ஸ்‌ செல்வதாயகம்‌ – தினகரன் 26-10-21