மின்வேலியில் சிக்கி இளம் ஜோடி உயிரிழப்பு – இரகசிய சந்திப்பின் போது சம்பவம்

இரத்தினபுரியில் இளம் காதல் ஜோடி, சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த சம்பவம் இரத்தினபுரி மாவட்டம் கொலொன்ன பிரதேச செயலக பிரிவு கொலொன்ன, பிட வெலகமவில் இடம்பெற்றுள்ளது. கொலொன்ன, பிடவெலகம பகு தியைச் சேர்ந்த 17 வயது ஹன்சிகா சந்தமாலி மற்றும் மாத்தறை டிக்வெல்ல பத்தனை வடுமதுவ பகுதியைச் சேர்ந்த மதகதீர கங்காணம்கே சுராஜ் பிரசன்ன ஆகிய இருவருமே இவ்வாறு மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஒக்டோபர் 16 இரவு காதலியை இரகசியமாக சந்திப்பதற்காக இளைஞன் வந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளம் பெண் ஹன்சிகா சந்தமாலியின் தந்தை தெரிவிக்கையில், எனது மகள் கொலொன்னவிலுள்ள தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்ததாக தெரிவித்தார். பின்னர் இரவு உறங்குவதற்கு முன் மகள் வீட்டில் இல்லாததால் பல இடங்களில் மகளை தேடியுள்ளனர்.

பின்னர் மறுநாள் காலை 7.30 மணியளவில் அவரது உறவின,ர் காணி ஒன்றில் மின்சார கம்பியில் சிக்கி மகள் உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார். தவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அருகில் மற்றொரு இளைஞனின் சடலத்தை கண்டுள்ளதாக கூறினர்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறியதாவது..

நானும் என் சகோதரியும் சிறந்த நண்பர்கள் போல இருந்தோம். என் சகோதரிக்கு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு அவள் சொல்லவில்லையென தெரிவித்தார். இதேவேளை அக்டோபர் திகதி அன்று சகோதருக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அந்த அழைப்பை உயிரிழந்த இளைஞன்தான் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி பெட்டி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இத் தொலைபேசியை தங்கையின் நண்பர் வாங்கிக் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்குத் தெரியாதென கூறியுள்ளார்.

இந்த சட்டவிரோத மின்வேலி குறித்து பொலிஸாரிடம் பலர் ஏற்கனவே முறையிட்டனர். பொலிஸ் அதிகாரிகள் தடவை மின்வேலி போட்ட நபரை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அந்த நபர் அதனை பொருப்படுத்தாமல் மீண்டும் மின்வேலி அமைத்ததால் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்வேலி அமைந்த சந்தேக நபர் கடந்த 17ஆம் திகதி காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் 18 திகதி எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.