காய்ச்சல் காணப்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்

பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்திலிருந்து , மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வரையும் , பொது போக்குவரத்து என்பவற்றை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம். 

இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம்  பாடசாலை ஊடாக கொவிட் பரவுவதைத் தவிர்க்க முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில்  திங்கட்கிழமை (25)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்திலிருந்து , மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வரையும் , பொது போக்குவரத்து என்பவற்றை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.

மாணவர்கள் உபயோகிக்கக் கூடிய தரத்தில் உயர்ந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை வழங்குமாறு பரிந்துரைக்கின்றோம்.

மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அது குணமடையும் வரை அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பாடசாலை ஊடாக கொவிட் பரவுவதைத் தவிர்க்க முடியும்.

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதி இருந்தும் , இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக்; கொள்ளாதவர்கள் இருந்தால் அவர்களை துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறு தடுப்பூசியைப் பெறாதவர்கள் எந்த வயது பிரிவினராகக் காணப்பட்டாலும் அவர்கள் ஆபத்துடையவர்களாகவே கருதப்படுவர் என்றார். 

-வீரகேசரி-(எம்.மனோசித்ரா)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page