புதுக்கடையில் நடந்தது என்ன? முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்

கொழும்பு புதுக்கடை பண்டாரநாயக்க மாவத்தையில் பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு முன்னாலுள்ள தோட்டத்தில் ஐந்து சிங்கள குடும்பங்கள் மூன்று தமிழ் குடும்பங்கள் உட்பட மொத்தம் 46 குடுங்கள் வாழ்கின்றனர்.

இதில் உள்ள சிங்கள சகோதரியொருவர் தம் குடும்பம் சகிதம் மார்ச் 12 திகதி இந்தியாவில் புனிதப்பயணமாக தம்பதிவ சென்று திரும்பியுள்ளார்.
இந்த தோட்டத்தில் முதலில் கொரோணா தொற்று இவருக்கே ஏற்பட்டது.

ஆனால் அவருக்கு கொரோணா தொற்றியுள்ளதென்பதை ஏப்ரல் 16ந் திகதி அவர் ஐ. டீ. எச். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் வரை அவருக்கு தெரியாதாம்.
(இதே முஸ்லிம் பெண் என்றால் நோயை மறைத்துக்கொண்டிருந்தார் என குற்றம் சாட்டி செய்தி வந்திருக்கும் )

அதற்கடுத்த நாள் 17ந்திகதி அவரது கணவரும் மகனும் உட்பட அதே தோட்டத்தில் வசிக்கும் இன்னும் 6 பேர் தொற்றுக்குள்ளானது தெரியவந்துள்ளது.

அவர்களைத் தொடர்ந்து 19ந் திகதி அவர்களது பக்கததுவீட்டார்களில் மேலும்10 பேருக்கு கொரோணா பொசிட்டிவ் என கண்டயறிப்பட்டுள்ளனர்.
ஆகையால் அந்தத் தோட்டத்திலிருந்த அத்தனை குடும்பத்தினரையும் அவர்களின் நலன்கருதி பரிசோதனை சாவடிகளுக்கு இராணுவம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுதான் உண்மையான செய்தி.

ஆனால் அந்த சிங்கள சகோதரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதை துள்ளியமாக முக்கியத்துவப்படுத்தி காட்டி, இவர் தம்பதிவ சென்று வந்ததால் தான் தொற்றுக்குள்ளானார் என செய்தி வாசித்து அவரை துள்ளியமாக தெரண டீ. வீ. செய்தி ஒளிபரப்பவில்லை மேலோட்டமாகத் தான் சொல்லப்பட்டது. 

நல்லதே. (அப்படி காட்டி யாரையுமே மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை யாரும் விரும்பக்கூடாது)

ஆனால் அதே தெரண செய்த கீழ்த்தரமான வேலை எதுவென்றால் குறித்த அந்த தோட்டத்துக்கு கொரோணாவை கொண்டு செல்ல காரணியாக அமைந்தவரை Highlight பண்ணி காட்டாமல் இருந்து விட்டு அவரால் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களை முக்கியத்துவப்படுத்தி (முகத்தை கூட கவர் பண்ணி மங்கலாய் காட்டாமல்)

தெளிவாகவே படம்பிடித்து., என்னவோ முஸ்லிம்கள் தான் கொரோணா வை பரப்புவதுபோல செய்தி ஒளிபரப்பியது.

இதேவேளை அதே செய்தியறிக்கையில் சுதுவெல்ல பிரதேசத்திலிருந்து corontine நிலையம் சென்று அங்கு பிரச்சினைப்படுத்திய ஓர் போதை வஸ்த்து பாவனையாளர் பற்றி காட்டும்போது அவரது முகத்தை அடையாளம் தெரியாதவாறு மங்கலாய் காட்டுகிறார்கள்.

இந்த படங்களைப் பார்த்தால் புரியும். இவர்களின் இந்த கேவலமான ஊடக செயற்பாட்டை தட்டிக்கேட்க யாருமில்லையா..?

– Mohamed Nawzar –


Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters