குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க ஒரு தகுதி வேண்டும் – சுதஸ்ஸன தேரர்

‘அல்லாஹ்’ பற்றிய ஞானசார தேரரின் கருத்து புத்தரின் போதனைகளுக்கு முரணானது

குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க ஒரு தகுதி வேண்டும் என்கிறார் சுதஸ்ஸன தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்‌குதலின்‌ பிரதான சூத்திரதாரி அல்லாஹ்‌ எனக்‌ குறிப்பிட்டு பெளத்த குரு ஒருவர்‌ வெளியிட்ட கருத்து முஸ்லிம்‌ சமூகத்தைச்‌ சேர்ந்த அனைவரதும்‌ மனதை நோகடிக்கச்‌ செய்துள்ளது. முஸ்லிம்‌ சமூகத்தை ஆயுதம்‌ ஏந்தச்‌ செய்வதற்‌கான கருத்துகளே இவை. ஊடகங்களில்‌ எவ்வாறான கருத்துக்கள்‌ தெரிவிக்கப்பட வேண்டுமென்பதை புத்த பெருமான்‌ தெளிவாகக்‌ கூறியுள்ளார்‌ என ஞானசார தேரர்‌ அண்மையில்‌ அல்லாஹ்‌ தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்கும்‌ மூகமாக நடைபெற்ற ஊடக மாநாட்டில்‌ கெக்கிராவே சுதஸ்ஸன தேரர்‌ தெரிவித்தார்‌.

அவர்‌ ஊடக மாநாட்டில்‌ தொடர்ந்தும்‌ உரையாற்றுகையில்‌ “வடக்கில்‌ தமிழ்‌ இளைஞர்களுக்கு போராட்‌டத்துக்கு அழைப்புவிடுத்‌தது போன்று குறிப்பிட்ட தேரர்‌ முஸ்லிம்‌ சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்‌. அவர்களின்‌ மனதைப்‌ புண்படுத்தியுள்ளார்‌. தமிழ்‌ ஈழப்‌ போரின்‌ போது முஸ்லிம்‌ சமூகமே பாதுகாப்பு பிரிவினருக்கு உளவுத்தகவல்‌களை வழங்கியது. நாட்டின்‌ பொருளாதாரத்துறையிலும்‌ முஸ்லிம்‌ சமூகம்‌ அரசாங்‌கத்துடன்‌ இணைந்து செயற்‌பட்டது. இன்றும்‌ நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்கள்‌ பாரிய ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார்கள்‌.

மத்திய கிழக்கு நாடுகள்‌ எமது பணியாளர்களை உள்‌வாங்கிக்‌ கொண்டுள்ளன. எமது நாட்டுக்கு அந்நிய செலாவணி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. இதுவே எமது நாட்டின்‌ பொருளாதார நிலைமை. ஒரு சில தேரர்களின்‌ தவறான கருத்துகளால்‌ தவறான போக்குகளால்‌ அத்தாடுகள்‌ எமக்கான எண்ணெய்‌ ஏற்‌மதியை நிறுத்திவிட்டால்‌ எமது நிலைமை என்னவாகும்‌.

கடந்த காலங்களில்‌ முஸ்லிம்‌ சமூகத்தை மோசமாக சாடிய அமைச்சர்கள்‌ நிதி உதவிகள்‌ வழங்குமாறு இஸ்லாமிய நாடுகளிடம்‌ மண்டியிடுகின்றார்கள்‌. அரபு நாட்டுத்தலைவர்களிடம்‌ முழந்தாளிடுகிறார்கள்‌. பங்களாதேஷிடம்‌ கடன்‌ வாங்குகிறார்கள்‌.இவ்வாறு உதவி பெற்றுக்கொள்ளும்போது அவர்களிடம்‌ இனவாதம்‌ இல்லை. அரபு நாடுகளினதும்‌, முஸ்லிம்‌ நாடுகளினதும்‌ தலைவர்களை வணங்கி நிதியுதவி பெற்றுக்கொண்டு இங்கு வந்து முஸ்லிம்கள்‌ அனைவரும்‌ அடிப்படைவாதிகள்‌ என்கிறார்கள்‌.

எல்லோருக்கும்‌ சமய கிரந்தங்களை விமர்‌சிக்க முடியாது. குர்‌ஆனுக்கு விளக்கம்‌ கொடுக்க ஒரு தகுதி வேண்டும்‌. ஒருவா்‌ சமய கிரந்தங்களை விமர்‌சிப்பதென்றால்‌ அவர்‌ அந்தக்‌ கரந்தம்‌ உருவான சூழல்‌, சமூகநிலைமை, இது உருவான கால அரசியல்‌ முறைமை என்பன பற்றியெல்லாம்‌ அறிந்திருக்க வேண்டும்‌

அல்குர்‌ ஆனில்‌ மனித உரிமைகள்‌ பற்றி போதிக்கப்பட்டுள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்‌ பின்பு இரண்டு தொலைக்காட்சி சேவைகள்‌ சில தேரர்களை அழைத்து குரல்‌ பதிவுகளை மேற்கொண்டு அவற்றை அரசியலுக்காக பயன்படுத்தினார்கள்‌. ஜனாதிபதி தேர்தலின்போது இந்த தொலைக்காட்சி சேவைகள்‌ மும்முரமாக செயற்பட்‌டன. பின்பு பொதுத் தோர்‌தலின்போதும்‌ இவ்வாறே செயற்பட்டார்கள்‌. இது ஓர்‌ அரசியல்‌ நிகழ்ச்சி. இப்போது ஏதேனும்‌ ஒரு தொலைக்காட்சி சேவை இதுபற்றி பேசுகிறதா?

மீண்டும்‌ தேர்தலொன்று வரப்போகிறது. மாகாண சபைத்‌ தேர்தல்‌, அதன்‌ பின்பு 2,3 வருடங்களில்‌ ஜனாதிபதித்‌ தேர்தல்‌, தேர்தல்‌ வரும்போது புதைக்கப்பட்டுள்ள சடலங்‌களைப்‌ பற்றிப்‌ பேசுவார்கள்‌. நான்‌ ஏப்ரல்‌ 21 ஆம்திகதியே பிறந்தேன்‌. அதனால்‌ நான்‌ இறக்கும்வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ எனது நினைவில்‌ இருந்து கொண்டே இருக்கும்‌.

இவ்வாறான தேரர்கள்‌ எப்‌போதும்‌ இனரீதியான பிரச்‌சினைகளை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள்‌. ஆனால்‌ உண்மையான பிரச்சினைகள்‌ தீர்க்கப்படாது அப்படியே இருக்கின்றன. இதனால்‌ நாட்டு மக்களே பாதிப்படைகிறார்கள்‌.

இஸ்லாமிய புரட்சியொன்று ஏற்பட்டதன்‌ பின்பு பல நாடுகளில்‌ பிரச்‌சினைகள்‌ உருவாகின. இந்த இஸ்லாமிய புரட்சியின்‌ பின்னணியினை ஆராய்ந்து பார்த்தால்‌ அங்கே அரசியலே இருந்தது இலங்கையிலும்‌ இதுவே நடந்தது. பெளத்த குருமார்கள்‌ புத்த பெருமானின்‌ போதனைப்படியே ஊடகங்களில்‌ கருத்து தெரிவிக்கவேண்டும்‌. மாறாக அரசியல்‌ பின்னணியைக்‌ கொண்டு கருத்துக்கூறக்கூடாது. இனவாதம்‌ பேசக்‌ கூடாது. கொலைக்குற்றம்‌ சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும்‌ வகையிலான கருத்துக்கள்‌ வெளியிடக் கூடாது என்றார்‌.

(ஏ.ஆர்‌.ஏ.பரீல்‌) விடிவெள்ளி 21-10-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page