எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய, காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் கனிஷ்ட பிரிவுகளுக்கான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை, கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
