விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மஞ்சள் தூளில் கோதுமை மா கலப்பு விவகாரம்…

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மஞ்சள் தூளில் கோதுமை மா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கலப்படம் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 80 சதவீதமான மஞ்சள் தூளில் கலப்படம் உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சந்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், தர நிர்ணய பணியகத்தினூடாக பரிசோதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த பரிசோதனையினூடாக மஞ்சள் தூளில் 80 வீத கோதுமை மா கலக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஞ்சள் தூளில் கலப்படம் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்களை அரசுடமையாக்குவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Previous articleகொரோனா தொற்று: பாடசாலைகள் ஆரம்பிக்கலாமா?
Next article1400 பள்ளிகள் தன்னிச்சையாக நடக்கின்றன.. நிதி ஊழல் மோசடிகள் நடக்கின்றன.