கலகெதர பிரதேசத்தில், கண்டைனர் சாய்ந்ததில் தந்தை மற்றும் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.

கட்டுகஸ்தோட்டை- குருநாகல் வீதியின் கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது சிறுமியும் அவரது 36 வயது  தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு சாதிக்காய் ஏற்றிச்சென்ற கொள்கலன் பாரவூரத்தி ஒன்று குடைசாய்ந்தது கார்  மீது மோதியதோடு பின்னர் மற்றுமொரு வாகனத்திற்கும்  சேதத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் காரில்  பயணித்த 2 வயது சிறுமி, தந்தை  பலத்த காயங்களுடன் கலகெதர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நில்லம்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட உதவி : Accident first

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price