எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கான செய்தி – 24 மணி இலவச தொலைபேசி

கடந்த பல வாரங்களாக தூதரகம்‌, கொன்சூலர்‌ அலுவலகம்‌ , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்‌, நலன்புரி சங்கங்கள்‌, மத நிறுவனங்கள்‌ மற்றும்‌ வெளிநாட்டு வாழ்‌ இலங்கை சமூகம்‌ ஆகியவை ஒன்றிணைந்து கோவிட்‌ 19 நோய்‌ பரவலின்‌ போது இலங்கையர்களுக்கு உதவுவதற்காக நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்‌.

அனைத்து விசாரணைகளுக்கும்‌ உரிய பதில்களை பெற்றுக்கொடுத்தல்‌, விசா விடயங்களில்‌ உதவுதல்‌, வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை புதுப்பித்தல்‌, மருத்துவமனைகள்‌ மற்றும்‌ தனிமைப்படுத்தல்‌ மையங்களில்‌ தொற்றுக்குள்ளான இலங்கையர்களுக்கு நுழைவனுமதிக்காக உதவுதல்‌, உலர்‌ உணவுகள்‌, சமைத்த உணவுகள்‌ விறியோகம்‌ செய்தல்‌ மற்றும்‌ கோவிட்‌ 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளுடன்‌ தினசரி தொடர்புகொள்ளல்‌ ஆகியவை இந்த உதவியில்‌ அடங்கும்‌.

மேலும்‌ இலங்கையர்களுக்கு விரைவாக உதவி வழங்கவும்‌ உடனடியான பதில்களை பெற்றுக்கொடுக்கவும்‌ ஒருங்கிணைப்பு அதிகாரிகள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

தூதரகம்‌ இலங்கையர்களுக்கு உலர்‌ உணவு, சமைத்த உணவு, பாதுகாப்பு முகமூடிகள்‌, சனிடைசர்கள்‌ வழங்குவதுடன்‌ ஏனைய பிற தேவைகளையும்‌ பூர்த்தி செய்கின்றது. அத்துடன்‌ தூதரகத்தின்‌ 800119119 என்ற 24 மணிநேர கட்டணமற்ற தொலைபேசி சேவையூடாக இலங்கையர்களுக்கு உதவ வார இறுது நாட்களிலும்‌ தூதரகம்‌ செயல்பட்டு வருகின்றது.

இலங்கையர்கள்‌ எளிதில்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ தனிமைப்படுத்தல்‌

நிலையங்களை அணுகுவதற்காகவும்‌ அவசர உதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவும்‌ இலங்கை தூதரகம்‌ அமீரக அரசாங்க அதிகாரிகளுடன்‌ நெருக்கமாக செயல்படுகிறது.

இலங்கை தூதாம்‌
ஐக்கிய அமீரகம்‌

12 ஏப்ரல்‌ 2020

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters