பால்மாவுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உள்ள 81 சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கு பெருந்தொகை கட்டணத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா நிதி இவ்வாறு கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தோச நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த கட்டண குறைப்பு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், குறித்த சீனி கொல்களன்கள் கடந்த மூன்று மாதங்களாக துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, சீனி இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதினால் கிட்டத்தட்ட 500 கொல்களன்கள் துறைமுகத்தில் சேமித்து வைக்க்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சத்தோச நிறுவனத்துக்காக விடுவிக்க்பட்ட கொல்களன்களில் 2 ஆயிரம் மெட்ரிக்டொன் சீனி காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

-தமிழன்..lk

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price