ட்ரோன் கமராவை இயக்கிய சீனப் பிரஜை கைது!

கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியொன்றில் ட்ரோன் கமரா இயக்க செயற்பாட்டினை மேற்கொண்டமைக்காக சீனப் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீனப் பிரஜை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் ட்ரோன்களை இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ட்ரோன்கள் இயக்கம் குறித்து கடுமையான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனைத்து ட்ரோன்களையும் இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  மீண்டும் ரணில் !!