ஊரடங்குச் சட்டம் 16 ஆம் திகதி வரை நீடிப்பு

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த மாவட்டங்களில்  ஊரடங்குச் சட்டம் 16 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் திருத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleமுடக்கப்பட்டுள்ள போருதொட்டையின் சமகால நிலவரம் என்ன?
Next articleகொரோனாவின் பின் இலங்கைக்கான நெருக்கடி