குறைந்தபட்ச பஸ் கட்டணம் 25 ரூபா?

நாட்டின் தற்போதைய நிலையில் போக்குவரத்து துறையின் அனைத்து செலவுகளையும் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

டயர், பட்டரி, எரிபொருள், ஒயில், மேலதிக பாகங்கள் மற்றும் சேவை கட்டணங்கள் வேகமாக உயர்வதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கை நாளை மறுதினம் உத்தியோக பூர்வமாக அரசாங்கத்திடம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஸ்ஸூக்கான குறைந்தபட்ச கட்டணமாக அறிவிடப்படும் 14 ரூபாவை 25 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (தினக்குரல் 5-10-21)

Read:  எரிபொருள் நெருக்கடிகள் விமான சேவைகளை பாதிக்காது