இலங்கையில் முஸ்லிம்களுக்கே உடற்பருமனும், தொப்பையும் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சிகர முடிவு

இலங்கையில் அதிகமான உடற்பருமன் கொண்டவர்களாக முஸ்லிம் சமூகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இலங்கையில் நீரிழிவு ஆராய்ச்சி (Diabetics Research) சஞ்சிகை வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் இலங்கையின் உடற்பருமன் பரவல் வீதம் (Obesity Prevalence Rate)  58.3 வீதமாகக் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நகர்ப்புறங்களில் அதிக எடை/உடற்பருமன் அதிகமாக உள்ளது: கொழும்பு நகரப்புற ஆய்வின் கண்டறிதல்கள் எனும் தலைப்பில் நொயெல் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள ஆய்விலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவரது கண்டறிதல்களின்படி 41- 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையேயே அதிகமான உடற்பருமன் உள்ளவர்கள் காணப்படுவதாகவும் அது 58.3 வீதமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகக் குறைவான 43.1 வீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.

அறிவு மட்டம், உணவுப் பழக்கங்களை அவதானிப்பதற்கு இந்த வீதத்தில் அடங்குகின்ற பால்நிலை, சமூகப் பின்னணிகளை ஆராய்வது முக்கியமானது எனக் குறிப்பிடும் ஆய்வாளர், அதிக உடற்பருமன் முஸ்லிம் சமூகத்தில் 65.5 வீதமாகவும், சிங்களவர் 52.3 வீதமாகவும், தமிழர் 40.2 வீதமாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொப்பையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகத்தில் 74.4 வீதமாகவும், சிங்களவர்களில் 56.8 வீதமாகவும் தமிழர்களில் 44.8 வீதமாகவும் காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available