2022 வரவு – செலவுத் திட்டத்தில் “செல்வ வரி”

எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள இலங்கையின் 2022வரவு செலவுத்திட்டத்தில் , வாழ்வாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை திட்டங்களும் மற்றும் நீண்டகாலமாக தாமதமாகியிருக்கும் செல்வ வரி உட்பட இதர பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . அதிக வருமான வரித் தொகை மற்றும் தாமதமான செல்வ வரியுடன் தற்காலிக கோவிட் 19 செஸ்ஸை (வரியை) அறிமுகப்படுத்த அமைச்ச்சு ஆலோசித்து வருகிறது.

தேசியவரவு செலவுத்திட்ட அதிகாரிகளுக்கு அரச , சந்தை மற்றும் வர்த்தகத்திற்கு நட்புறவைக்கொண்ட முன்மொழிவுகளை பட்ஜெட்டுக்கு முன்னரான கூட்டங்களின் போதுசமூகத்தின் அனைத்து துறைகளையும் சார்ந்தவர்கள்மற்றும் , அமைச்சின் தலைவர்களுடன் கலந்துரையாடி வகுக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சஅறிவுறுத்தியுள்ளார்.

சமர்பிக்கப்பட விருக்கும் வரவுசெலவுத் திட்டம் குறைந்தபட்சம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பாக இருக்கும், இது தேவையினடிப்படியில் உற்பத்தி , வேலைவாய்ப்பு உருவாக்கம் தொற்றுநோய்க்குப் பொருளாதாரத்தை பொருளாதாரத்தை 6 சதவிகிததிற்கும் அதிகமான வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்துதல் போன்ற முக்கியமான பிரச்சினைகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று திறைசேரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மோட்டார்வாகன வர்த்தகர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும், டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும்வகையில் , வரி மற்றும் வரி செலுத்துதலுக்கான நிதி சம்பந்தமான கருவியுடன் 100 சதவீத ரொக்க எல்லை வைப்பை டொலரில் அறிமுகப்படுத்தும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் அமைச்சு பரிசீலித்து வருகிறது.

இது வரவு செலவுத் திட்டத்தில் வருவாய்க்கானயோசனையாக சேர்க்கப்படும். ‘இப்போதைக்கு, இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்படுகிறது, ஆனால் இப்போதும் மற்றும் நவம்பருக்கு இடையில் என்ன நடக்கிறது என்பது யூகமாகும் (இந்த திட்டம் அறிவிக்கப்படுமா இல்லையா)’ என்று திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிஒருவர் பிசினஸ் டைம்ஸிற்கு கூறியுள்ளார்.. 2022 ஆம் ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறையானது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் சுமார் 11.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று அமைச்சு கணித்துள்ளது. இலங்கையின் குறைந்த வருவாய் நிகரத் தேசிய உற்பத்தி விகிதம் நிதி விவரத்தில் ஒரு முக்கிய பலவீனமாக உள்ளது மற்றும் அது சராசரி23 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிவதாக அதிகாரிஒருவர் கூறியுள்ளார்.

திறைசேரியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2021 ஆம் ஆண்டில்அரசவருவாய் ரூ 2.01 டிரில்லியனுடன் ஒப்பிடும்போது, 2022 ஆம் ஆண்டில் அரசவருவாய் சுமார் 2.43 டிரில்லியனா க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 இல்பொது மீள்நடைமுறைமற்றும் மூலதனசெலவினம் 5.13 டிரில்லியன் ரூபாவாகும். . 2021 இது 3.52 டிரில்லியன் ரூபாவென , மதிப்பீடுகள் காண்பிக்கின்றன . வரவுசெலவுத்திட்டத்தி ல் . துண்டுவிழும் தொகையை நிரப்பவும் குறைமதிப்பீட்டு தொகையாகவும் ரூ. 3.18 டிரில்லியன்தொகை நிரப்பவும் அரசாங்கம் கடன் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகின்றமையை. பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் துணை மதிப்பீடுகள், சமீபத்தில் அமைச்சர் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட ட அமைச்சரவை அறிக்கைகுறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டின் பெரும்பகுதி வாழ்வாதார மேம்பாடு, பொது உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனுக்கான நிலையான வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இணையவழி மூலம்வரி சேகரிப்பு அறிமுகப்படுத்தப்படும் வரிகள் மற்றும் தீர்வைகளிலிருந்து.வருமானத்தில் 50 சதவிகிதம் பதிவுகளைகொண்ட மது, சிகரெட், தொலைத் தொடர்பாடல் , பந்தயம் , மற்றும் வாகனங்களுக்கு அதிகபட்ச சாத்தியமான விகிதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்ரி ) அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் வரி வசூலிப்பு செயல்திறன் மேம்படுத்தப்படும்.

மேலும், மூலதன அனுகூலங்களுக்கான வரிகளை இலகுவாக்க முன்மொழியப்பட்டிருக்கிறது , சொத்தின் விற்பனை விலை அல்லது ஒரு சொத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதியில் எது அதிகமோஅதன் அடிப்படையில் வரி கணக்கிடப்படும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு இலாபங்கள் மீது மூன்று ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். .

தொற்றுநோய்க்குபின்னரான வறுமையைப் போக்க பண உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ம் அந்த திறைசேரி அதிகாரி கூறியுள்ளார். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் தொலைமற்றும் இணையவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter