பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (22) முற்பகல் மல்வத்து மஹா விஹாரையின் மஹாநாயக்கரை சந்தித்து நல்லாசி பெற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் தற்போதைய சமகால அரசாங்கம் பாரிய வெற்றியை பெற்றது. இது நாட்டிற்கு நன்மையான ஒரு விடயமாக அமையும். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மறுசீரமைக்கப்படும் எனவும் விரைவில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மல்வத்து மஹாநாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Akurana Today All Tamil News in One Place