பதிவு செய்யப்படாத சொத்துக்கள்‌ பட்டியலை வெளியிட்டது நாகரிகமான செயல்‌ அல்ல!

கொழும்பு மாநகர சபை எல்லை பிரதேசத்தில்‌ இதுவரை தங்கள்‌ சொத்து உரிமையை பதிவு செய்து கொள்ளாதவர்களின்‌ பட்டியலை மாநகர சபையின்‌ இணையத்தில்‌ பதிவிட்டிருப்பதை ஏற்றுக்‌ கொள்ள முடியாது. என்னை அறிவுறுத்தாமலேயே இவ்வாறு மேற்கொள்ளப்‌படடுள்ளது.. இதனால்‌ பலர்‌ அசெளகரியங்களுக்குள்ளாகி உள்ளனர்‌. அதற்காக மாநகர சபை சார்ப்பாக நான்‌ மன்னிப்பு கோருகிறேன்‌ என கொழும்பு மாநகர சபை மேயர்‌ மேயர்‌ ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்‌.

கொழும்பு மாநகர சபை வளாகத்தில்‌ நேற்று முன்தினம்‌ மாலை ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர்‌ சந்திப்பில்‌ கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்‌.

அவர்‌ அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்‌, கொழும்பு மாநகர சபையின்‌ வரிப்பணம்‌ பட்டியலில்‌ இதுவரை அதன்‌ உரிமையை பதிவு செய்துகொள்ளாத சொத்து உரிமை கோரும்‌ உரிமையாளர்கள்‌ தங்களது சொத்து உரிமையை உறு இப்படுத்திக்‌ கொள்ளுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர்‌ மாநகர சபை ஆணையாளரால்‌ அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பதிவு செய்யப்பபடாத சொத்துக்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்திருப்பது நல்ல விடயம்‌. ஏனெனில்‌ அப்போது வரிபணம்‌ அறவிடுவதற்கு அது இலகுவாக இருக்கும்‌.

எனினும்‌ மாநகர எல்லையில்‌ இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்களின்‌ உரிமையாளர்களின்‌ விட்டு இலக்கம்‌ மற்றும்‌ வரி பணம்‌ இலக்கம்‌ அடங்‌இய பட்டியல்‌ ஒன்றை மாநகர சபை இணையத்தனத்தில்‌ பதிவிட்டிருப்பது நாகரிமான செயல்‌ அல்ல. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன்‌ இந்த விடயம்‌ என்னையோ மாநகர சபையையோ அறிவறுத்தாமலேயே மேற்‌கொள்ளப்பட்டுள்ளது. இதனால்‌ பலர்‌ அசெளகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்‌. அதற்‌காக மாநகர சபை சார்ப்‌பாக நான்‌ அவர்களிடம்‌ மன்னிப்பு கோருகிறேன்‌.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

மேலும்‌ பதிவு செய்யப்படாத சொத்துக்கள்‌ தொடர்‌பான பட்டியல்‌ இணையத்தளத்தில்‌ வெளியானதனால்‌, தங்கள்‌ சொத்‌துக்களை கொழும்பு மாநகர சபை கையகப்படுத்திக்‌ கொள்ளப்போகிறதா என்ற அச்சம்‌ அவர்களுக்கு ஏற்‌பட்டுள்ளது. அவ்வாறு அவர்களது சொத்துக்களை கையகப்படுத்திக்‌ கொள்ள கொழும்பு மாநகர சபைக்கு எந்த அதிகாரமும்‌ இல்லை. ஆனால்‌ யாராவது வரிப்‌ பணம்‌ செலுத்துவதை தொடர்ந்து புறக்‌கணித்து வந்தால்‌ அவர்களுக்கு அது தொடர்பில்‌ அறிவுறுத்திய பின்னரும்‌ வரி பணம்‌ செலுத்தாவிட்டால்‌ நீதிமன்ற நடவடிக்கை ஊடாக அந்த சொத்தை மாநகர சபைக்கு கழ்‌ எடுத்துக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன்‌ மாநகர சபையின்‌ சட்டத்தின்‌ பிரகாரம்‌, யாராவது ஒருவர்‌ சொத்து ஒன்றின்‌ உரிமையை வேறு ஒருவருக்கு மாற்‌இய பின்னர்‌ 3வாரத்துக்குள்‌ அது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்‌பித்த, வரிபணம்‌ பட்டியலில்‌ பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்‌. இதனை அடிப்படையாகக்‌ கொண்டே மாநகர ஆணையாளர்‌ பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்திருக்கிறார்‌. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்‌ இதுவரை 59ஆயிரம்‌ பதிவு செய்யப்படாத சொத்துக்கள்‌ காணப்படுகின்றன. எனினும்‌ அவர்களின்‌ வரிபணம்‌ இலக்கத்தை பகிரங்கப்படுத்தியது நாகரிகமான விடயமல்ல என்றார்‌. (மெட்ரோ நியூஸ் 1-10-21)