வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முன்வைத்துள்ள யோசனை

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கி விசேட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

இதற்கமைய, வெளிநாட்டு வருவாய் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஊடாக அரசுக்கு வெளிநாட்டு நாணயத்தில் வரி செலுத்தி, வாகன இறக்குமதி செய்ய அவதானம் செலுத்துவது தொடர்பான யோசனையை மத்திய வங்கி இவ்வாறு முன்வைத்துள்ளது.

கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து, வாகன இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீள வாகனங்களை இறக்குமதி செய்யும் நோக்கில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஹிரு செய்திகள் hirunews.lk