வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி!

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை கடந்த ஜூன் 22 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஹிரு செய்திகள் hirunews.lk

Read:  மக்களின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள ராஜபக்ஷர்கள் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்