அக்குறணை மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர்

அக்குறணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்‌ கொவிட்‌ 19 தொற்றாளர்கள்‌ அடையாளங்‌ காணப்பட்டதைத்‌ தொடர்ந்து அப்‌ பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்‌ அங்குள்ள நிலைவரங்கள்‌ தொடர்பில்‌ அக்குறணை பிரதேச சபைத்‌ தவிசாளர்‌ இஸ்திஹார்‌ இமாதுத்தீன்‌ விடிவெள்ளிக்குவழங்கிய செவ்வி வருமாறு:

அக்குறணை முடக்கப்பட்டுள்ள நிலையில்‌ அங்குள்ள தற்போதைய நிலவரம்‌ பற்றிக்‌கூற முடியுமா?

அக்குறணையில்‌ இதுவரை 7 பேருக்கு, கொவிட்‌ 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 கிராம சேவை பிரிவுகள்‌ சம்பூரணமாக முடக்கப்பட்டுள்ள. அரசாங்க அதிகாரிகள்‌ திட்டமிட்ட வகையில்‌ சில வேலைத்திட்டங்களை நேற்று முன்தினம்‌ முதல்‌ ஆரம்பித்துள்ளனர்‌.

பிரதேச செயலாளர்‌ காரியாலயம்‌, அக்குறணை ஜம்‌இய்யதுல்‌ உலமா மற்றும்‌ அக்குறணை வர்த்தகசங்கம்‌ ஆகிய இதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும்‌ மிகவும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ தொலைபேசி வழியாக விடுக்கப்படும்‌ கோரிக்கைகளுக்கமைய வீடுகளுக்கான நேரடி விநியோக சேவைகளாகவே இவை முன்னெடுக்கப்படுகின்றன.

உலருணவுப்‌ பொருட்களைப்‌ பொறுத்தவரை, அத்தியாவசிய பொருட்கள்‌ அடங்கிய 500 ரூபா, 100௦ ரூபா மற்றும்‌ 2000 ரூபா பெறுமதியான 3 வகையான பொதிகள்‌ தயார்‌ செய்யப்பட்டுள்ளன. இந்தப்‌ பொதிகள்‌ பள்ளிவாசல்‌ மஹல்லாக்கள்‌ ஊடாக தேவையானோருக்கு விதியோகிக்கப்படுகிறது. தமக்குத்‌ தேவையான பெறுமதிக்குரிய பணத்தைச்‌ செலுத்தி இப்‌பொதிகளை அவர்கள்‌ தமது வீடுகளுக்கே வரவழைக்கலாம்‌.

இதற்கு மேலதிகமாக தனவந்தர்கள்‌ ஏழை மக்களுக்கு தேவையான உலருணவுகளை இராணுவத்தின்‌ உதவியுடன்‌ இலவசமாக வழங்கி வருகின்றனர்‌.

அக்குறணையில்‌ மொத்தமாக எத்தனை பேர்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்‌?

ஏற்கனே கொவிட்‌ 19 தொற்றாளர்களுடன்‌ நெருங்கிய தொடாபை பேணியதாக சந்தேகிக்கப்பட்ட சுமார்‌ 140 போர் புணானை தனிமைப்படுத்தல்‌ நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்‌. அவர்களைச்‌ சூழ வாழ்ந்த ஏனைய பல குடும்பங்கள்‌ வீடுகளில்‌ சுய தனினமப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்கள்‌ பற்றிய முழு விபாமும்‌ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு தெரியாத நிலையும்‌ உள்ளது.

ஏனெனில்‌ பெரும்பாலான விடயங்களை இராணுஉத்தினர்‌ கையாள்வதால்‌ பாதுகாப்புத்‌ரப்புக்கும்‌ சுகாதார தரப்புக்குமீடையில்‌ சரியான தொடர்பாடல்‌ இல்லாத சிக்கலும்‌ இங்கு உள்ளது

அக்குறணை மக்கள்‌ அரசாங்க அதிகாரிகளுக்கும்‌ சுகாதாத்துறையினருக்கும்‌ ஒத்துழைப்ப, வழங்கவில்லை என சில சிங்கள ஊடகங்களிலும்‌ சமூக வலைத்தளங்களிலும்‌ முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்‌ பற்றி?

இவை முழுக்க முழுக்க பொய்யானவை. அதனை இந்த ஊரின்‌ தவிசாளர்‌ என்ற வகையில்‌ நான்‌ முற்றாக மறுக்கிறேன்‌

அக்குறணையைப்‌ பொறுத்தவரை 10 நாட்களுக்கு முன்னர்‌ ஏனைய ஊர்களைப்‌ போன்றே சாதாரண ஊரடங்குச்‌ சட்டநடைமுறைகளே இருந்தன. ஆனால்‌ இன்று அக்குறணை முழுமையாக முடக்கப்பட்டதன்‌ பின்னர்‌ மக்கள்‌ அரசாங்க அதிகாரிகளுக்கும்‌ பாதுகாப்பு தரப்பினருக்கும்‌ முழுமையான ஒத்துனழப்பை வழங்கி உருகின்றனர்‌.

ஆனால்‌ அக்குறணை பிரதேச சபைக்குட்பட்ட சில பின்தங்கிய பிரதேசங்களில்‌ மக்களுக்கு உரிய முறையில்‌ அத்தியவசிய பொருட்கள்‌ கிடைக்காமை, நீர்‌ விநியோகம்‌ தடைப்பட்டமை போன்ற சில காணங்களால்‌ மக்கள்‌ அப்‌ பகுதி அரச அதிகாரிகளுக்கு தொடர்பை ஏற்படுத்தி தமது கஷ்டங்களை முன்வைத்தார்களே தவிர வேறு எந்தவிதமான சம்பவங்களும்‌ இடம்பெறவில்லை சில்‌ இடங்களில்‌ 8 நாட்களுக்கும்‌ மேலாக குடிநீர்‌ விநியோகிக்கப்படவில்லை. இது அப்‌பகுதி மக்கள்‌ மத்தியில்‌ விசனத்னதை ஏற்படுத்தி யிருந்தது.

எமது ஊர்‌ எல்லைக்குள்‌ ஓர்‌ அரச வைத்தியசானல இல்லை. கண்டி அல்லது பேராதனை னவத்தியசாலைகளுக்கே நாம்‌ செல்ல வேண்டியுள்ளது. இதனால்‌ நோயாளிகளை னவத்தியசாலைகளில்‌ அனுமதித்தல்‌, அவர்களைப்‌ பார்வையிடச்‌ செல்லல்‌ போன்ற சில நடை(றைச்‌சிக்கல்களே உள்ளன).

இந்த விடயங்களை சீர்படுத்த அரசாங்க தரப்பினால்‌ உரிய நடவடிக்னககள்‌ எடுக்கப்படவில்லை என்ற குறைபாடு மக்கள்‌ மத்தியில்‌ உள்ளதே தவிர. மக்கள்‌ அரசாங்கத்தின்‌ விதிகளை எச்சந்தர்ப்பத்திலும்‌ மீறவில்லை.

கொவிட் 19 இனை கட்டுப்படுத்துவதில்‌ அரசாங்கத்தின்‌ வேலைத் திட்டங்களுடன்‌ திருப்திப்‌படுகின்ரீர்களா?

இது அக்குறணைக்கு மட்டுமுரிய பிரச்சினையல்ல. முழு உலகமே கொவிட்‌ 19 அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க முடியாது வல்லரசு நாடுகள்‌ கூட சுருண்டு போயுள்ளன அந்த வகையில்‌ இதிலிருந்து நாட்டைப்‌ பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ . கொவிட்‌19 செயலணித்‌ தலைகர்‌ பசில்‌ ராஜபக்ஷ ஆகியோரின்‌ வழிகாட்டலில்‌ வேலைத்திட்டங்கள்‌ முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு நாம்‌ அனைவரும்‌ முழுமையாக ஒத்துழைப்பு உழங்க வேண்டும்‌.

மிக விரைவாக நாடு இந்த அச்சுறுத்திலிலிருந்து விடுபடவேண்டும். இதில்‌ இந்த நாட்டுப்‌ பிஜைகள்‌ ஒவ்வொருவருக்கும்‌ பொறுப்புள்ளது. இந்தப்‌ பொறுப்பை நாம்‌ அனைவரும்‌ விளங்கி நடந்து கொள்ள வேண்டும்‌

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page