கடந்த 2 நாட்களில் 39 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள வெளிநாடுகளுக்கு திரும்பியவர்கள்.

நோயாளிகளின் விவரங்கள்

2020.08.20
சென்னையில் இருந்து திரும்பிய 16 பேர்

2020.08.21
துபாயில் இருந்து திரும்பிய 18 பேர்
சென்னையில் இருந்து திரும்பியவர்கள் 02
இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய 01 பேர்
குவைத்திலிருந்து திரும்பிய 01 பேர்
துருக்கியிலிருந்து திரும்பிய 01 பேர்

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,941 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,789 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளில் 141 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.