ஃபைசர் தடுப்பூசிகளின் 4 மில்லியன் டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

ஃபைசர் தடுப்பூசியின் மேலும் நான்கு மில்லியன் டோஸ்கள் சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கையில் ஒரே தடவையில் அதிகபடியாக இறக்குமதி செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் அளவுகள் இவையாகும்.

தடுப்பூசி அளவுகள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக இன்று காலை 08.37 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்சமயம் இந்த தடுப்பூசிகளின் அளவுகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் கலஞ்சியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

-வீரகேசரி-