அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

அதேவேளை, கையிருப்பை பேணும் நோக்கில் 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிரு செய்திகள் hirunews.lk