19வது திருத்த சட்டம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும்? – அமைச்சர் அலி சப்ரி விளக்கம்

எமது நாட்டின்‌ அரசியலமைப்புச்‌ சட்டம்‌ 19 தடவைகள்‌ திருத்தப்பட்டுள்ளது. தற்போது 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச்‌ சட்டமே அமுலில்‌ உள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ ஷவின்‌ தலைமையிலான புதிய அரசாங்கம்‌ 2௦ ஆவது தடவையாக அரசியல்‌ அமைப்பில்‌ திருத்தங்களைச்‌ செய்யவுள்ளது அல்லது புதிய அரசியலமைப்புச்‌ சட்டம்‌ உருவாக்கப்பட்டவுள்ளது. இவ்விடயம்‌ தொடர்பாக நீதிமைச்சர்‌ அலி சப்ரியுடன்‌ மேற்கொண்ட கலந்துரையாடலை இங்கு தருகிறோம்‌.

நாட்டில்‌ நிலவும்‌ பிரச்சினைகளுக்குத்‌ தீர்வுகள்‌ பெற்றுக்‌கொள்ளும்‌ வகையிலான முன்‌னேற்றகரமான புதிய அரசியலமைப்பொன்று அவசியமாகவுள்ளது என நீதியமைச்சர்‌ அலி சப்ரி தெரிவித்தார்‌. புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது தொடர்பில்‌ அவர்‌ கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்‌. 19ஆவது திருத்தச்‌ சட்டம்‌ அவசர அவசரமாக தனிப்பட்ட காரணங்களுக்காகவே முன்னெடுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச்சட்டத்தில்‌ நிறைய சிக்கல்கள்‌ உள்ளன. இந்த அரசியலமைப்புச்‌ சட்டம்‌ வெஸ்ட்மினிஸ்டர்‌ முறைமையா? அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையா? இது தொடர்பில்‌ சில உதாரணங்‌களை முன்‌ வைக்க முடியும்‌.

கடந்த நவம்பர்‌ மாதம்‌ 16 ஆம்‌ திகதி நாம்‌ புதிய ஜனாதிபதியொருவரைத்‌ தெரிவு செய்து கொண்டோம்‌. என்றாலும்‌ அவரால்‌ தேவையான பாராளுமன்றமொன்றினை அமைத்துக்‌கொள்ள 9 மாதங்கள்‌ கடந்து சென்றுள்ளன. ஜனாதிபதியினால்‌ தனக்குத்‌ தேவையான பாராளுமன்றத்தை அமைத்‌துக்கொள்ள முடியாமற்‌ போனமையே இந்தத்‌ தாமத்திற்குக்‌ காரணமாகும்‌. 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்‌ சட்டத்தின்‌ காரணமாகவே இந்நிலைமை உருவானது. 19 ஆவது திருத்தச்‌ சட்டம்‌ அமுலுக்கு வருவதற்கு முன்பு, ஜனாதிபதியாக ஒருவர்‌ நியமிக்கப்‌பட்ட மறுதினமே பாராளுமன்‌றத்தைக்‌ கலைத்துவிடுவதற்கு சட்டத்தில்‌ இடமிருந்தது. 69 இலட்சம்‌ மக்கள்‌ ஜனாதிபதியை தெரிவு செய்து கொண்டதன்‌ பின்பு அவரால்‌ தனக்குத்‌ தேவையான அரசாங்கம்‌ ஒன்‌நினைத்‌ தெரிவு செய்வதற்கு முடியாதிருத்தால்‌ அது மிகவும்‌ பாரதூரமான விடயமாகும்‌. இவ்‌வாறான அரசியலமைப்புச்‌ சட்‌டத்தினால்‌ நாட்டின்‌ ஆட்சியில்‌ சிக்கல்கள்‌ ஏற்பட்டன. உலகில்‌ எந்த நாட்டிலும்‌ இவ்‌வாறான நிலைமை இல்லை.

எந்தவொரு நாட்டிலும்‌ வரவு செலவுத்திட்ட அறிக்கை, நம்பிக்கையில்லா பிரேரணை மூலம்‌ நூற்றுக்கு 50 இற்கு மேற்‌பட்ட வாக்குகள்‌ கிடைக்கப்‌பெற்றால்‌ அரசு தோற்கடிக்கப்படுவதுடன்‌ புதிதாக தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும்‌.

பாராளுமன்றத்தில்‌ 2/3 பெரும்‌பான்மை இந்த அரசாங்கத்‌துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பாராளுமன்றம்‌ கலைக்கப்பட்ட பின்பு மீண்டும்‌ பாராளுமன்றம்‌ அமைவதற்கு இவ்வாறு 2/3 பெரும்பான்மைப்‌ பலம்‌ மக்களின்‌ விருப்பத்திற்கு அமையவே கிடைக்கப்‌ பெற்‌றுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின்‌ குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டியது மிகவும்‌ அவசியமானதாகும்‌.

மேலும்‌ ஓர்‌ உதாரணத்தைக்‌ குறிப்பிடலாம்‌. 19ஆவது திருத்தச்‌ சட்டத்தின்‌ மூலம்‌ குழப்பத்துக்குட்பட்டு அவசரப்பட்டு ஆணைக்குழுக்கள்‌ நியமிக்கப்பட்டன. இவற்றில்‌ தேர்தல்கள்‌ ஆணைக்குழுவை நோக்கினால்‌ அதில்‌ உறுப்பினர்‌ எண்ணிக்கை மூன்றாகும்‌. தேர்‌ததல்கள்‌ ஆணைக்குழு தீர்மானம்‌ மேற்கொள்வதற்கு எத்தனை உறுப்பினர்‌ இருக்க வேண்டும்‌. ஆதரவுதெரிவிக்க வேண்டும்‌ என்பது பற்றி குறிப்பிடப்‌பட்டில்லை. உறுப்பினர்கள்‌ மூவரும்‌ இருக்க வேண்டும்‌. நடைமுறையில்‌ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்‌ பற்றி கவனத்தில்‌ கொள்ளாது இவ்‌ஆணைக்குழு நியமிக்கப்பட்‌டுள்ளதால்‌ பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தீர்மானங்கள்‌ மேற்கொள்‌வதற்கு ஆணைக்குழுவின்‌ மூவரும்‌ இருக்க வேண்டும்‌. இந்நிலையில்‌ எதிர்ப்புகள்‌ எழும்‌ சந்தர்ப்பங்களில்‌ எஞ்‌சியுள்ள செயற்பாடுகளுக்குத்‌ தடை ஏற்படுகிறது.

மேலும்‌ ஒரு விடயத்தையும்‌ குறிப்பிடலாம்‌. பாதுகாப்பு தொடர்பில்‌ நோக்கினால்‌ முப்‌படைகள்‌ மற்றும்‌ பொலிஸ்‌ என்பன ஜனதிபதியின்‌ கீழேயே உள்ளன. இதேவேளை அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ ஓரிடத்தில்‌ ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வகிக்க முடியாது எனக்‌ குறிப்பிடப்பட்டுள்‌ளது. இந்நிலைமை பல்வேறு சிக்கல்களைத்‌ தோற்றுவிப்பதாகும்‌. முப்படைகளுக்கு த்‌தலைவராக ஒருவரும்‌ பாதுகாப்பு அமைச்சராக மற்றுமொருவரும்‌ பிரிந்து கடமையாற்றுவது சிரமமாகும்‌. ஆனால்‌ இந்த அரசாங்கத்தில்‌ அண்ணனும்‌ தம்பியும்‌ என்பதால்‌ பிரச்சினைகள்‌ ஏற்படாது என்றாலும்‌ அவர்கள்‌ இருவரும்‌ பிறர்‌ என்றால்‌ இந்நிலைமையின்‌
கீழ்‌ முரண்பாடுகள்‌ நிச்சயம்‌ ஏற்படும்‌. 2015 இற்கும்‌ 2019 இற்கும்‌ இடைப்பட்ட காலப்‌பகுதியில்‌ ஆட்சியிலிருந்த அரசாங்கத்தில்‌ இம்‌ முரண்பாட்டு நிலைமையை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதிக்கு பொலிஸ்‌ மா அதிபர்‌ மீது நம்‌பிக்கை இல்லாவிடின்‌ அவரை நீக்குவதற்கு முடியுமாக இருக்க வேண்டும்‌. அவரை நீக்கு வதற்கு முடியாத நிலைமை அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ இருக்கும்போது அவருடன்‌ ஒத்துழைத்து செயற்படுவது மிகவும்‌ பாரதூரமான விடயமாகும்‌.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்‌ தாக்குதல்‌ சம்பவம்‌ தொடர்பில்‌ அப்போது பதவியிலிருந்த பொலிஸ்மா அதிபர்‌ குற்றமற்றவராக இருக்கலாம்‌. என்றாலும்‌ அவரை பதவியிலிருந்து நீக்கும்‌ தேவை ஏற்பட்டால்‌ இந்த அரசியலமைப்பின்‌ மூலம்‌ அவ்வாறு நீக்க முடியாது .உதாரணமாக எனது வீட்டில்‌ பாதுகாப்புக்கடமையில்‌ ஈடுபட்‌டிருக்கும்‌ பாதுகாப்பு அதிகாரிகள்‌ மீது எனக்கு நம்பிக்கை இல்லையாயின்‌ அவர்களை நீக்குவதற்கு என்னால்‌ முடியுமாக இருக்க வேண்டும்‌. இவ்‌வாறான நிலைமை இல்லாத சந்தர்ப்பத்தில்‌ வீட்டின்‌ பாதுகாப்பு அதிகாரிகள்‌ தொடர்பில்‌ என்னால்‌ நம்பிக்கை கொள்ளமுடியாது சிக்கலான நிலைமை உருவாகும்‌.

இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்‌ 19ஆவது திருத்தச்‌ சட்டம்‌ ஏளனத்துக்கு உள்ளாகியுள்ளது. இச்சட்டம்‌ பல்வேறு குறைகளுடன்‌ காணப்படுகிறது. எனவே குறைகள்‌ நிவர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதி தனது கடமைகளைத்‌ தடைகளின்றி திறம்பட நிறைவேற்றுவதற்கான பின்புலம்‌ ஏற்படுத்திக்‌ கொடுக்கப்பட வேண்டும்‌. அதனாலேயே 19 ஆவது திருத்தச்‌ சட்டம்‌ ஒழிக்‌கப்படுவதற்கு எதிர்பார்க்கப்‌படுகிறது. முதலில்‌ நாம்‌ 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கவேண்டும்‌. திருத்தத்தில்‌ சில குறைபாடுகள்‌ உள்ளன. உதாரணமாக ஜனாதிபதிக்கு இரண்டு தடவைக்கு மேல்‌ பதவிக்காக போட்டியிட முடியாது. இந்த விதி மாற்றப்படக்‌ கூடாது என கருதப்படுகிறது. ஜனாதிபதியின்‌ பதவிக்காலம்‌ 5 வருடத்துக்கு மட்டுப்படுத்‌தப்பட்டுள்ளது. இந்த விதியும்‌ மாற்றப்படத்‌ தேவையில்லை. 18ஆவது திருத்தத்திலுள்ள மக்களுக்கு நன்மை பயக்கும்‌ விடயங்களும்‌ நீக்கப்படத்‌தேவையில்லை. புதியவோர்‌ அரசியலமைப்புச்‌ சட்டத்தை உருவாக்குவதற்கே அரசு எதிர்பார்த்துள்ளது. இது வரை காலம்‌ அமுலிலிருந்த அரசியலமைப்பு சட்டங்களில்‌ உள்ள நன்மை பயக்கும்‌ விடயங்களை உள்ளடக்கி புதிய அரசியலமைப்புச்‌ சட்டமொன்றினை முன்வைப்பதற்கு அரசாங்கம்‌ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில்‌ கலந்துரையாடல்கள்‌ மேற்கொள்ளப்படவுள்‌ளன.

யுத்தம்‌ நடைபெற்ற காலப்‌ பகுதியில்‌ பிரதமருக்கிருந்த அதிகாரங்கள்‌ 19ஆவது திருத்தச்சட்டம்‌ இல்லாமற்‌ செய்யப்பட்டவுடன்‌ மீண்டும்‌ கிடைக்கப்பெறும்‌. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்‌ போது தேர்தல்‌ முறைமை தொடர்பில்‌ விஷேட கவனம்‌ செலுத்துவதற்குத்‌ தீர்மானிக்‌கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு தேர்தல்‌ முறைமை தொடர்பாக முழு நாடும்‌ எதிர்ப்பினை வெளியிட்‌டுள்ளது. எதிர்ப்பு மேலோங்கியிருப்பதற்கு பல காரணங்கள்‌ உள்ளன. இந்த விருப்பு வாக்குமுறை தேர்தலுக்கு பெருந்தொகையான பணம்‌ செலவிட வேண்‌டியுள்ளது. சில அபேட்சகர்கள்‌ தோர்தலில்‌ போட்டியிடமுடியாத நிலைமை உருவாகியுள்ளது. ஒரு தொகுதியில்‌ போட்டியிட்ட அபேட்சகர்‌ ஒருவர்‌ அடுத்த சந்தர்ப்பத்தில்‌ வேறு தொகுதியொன்றில்‌ போட்டியிடுவதற்கு முடியுமாக இருக்கிறது. இந்நிலைமை காரணமாக பாரளுமன்ற உறுப்பினர்‌ தனது தொகுதிக்கு மாவட்டத்துக்கு பொறுப்புள்ளவராக இல்‌லாத நிலைமை உருவாகும்‌ சந்தர்ப்பம்‌ ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான அனைத்து முரண்‌பாடுகளும்‌ இல்லாமற்‌ செய்யப்‌படும்‌ அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. விகிதாசார தேர்தல்‌ முறைமை மற்றும்‌ தொகுதி வாரி தேர்தல்‌ முறைமை ஆகிய இரு தேர்தல்‌ முறைகளினதும்‌ கலப்புடன்‌ கூடிய ஜேர்மன்‌ முறைமைக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பில்‌ ஆராயப்‌படும்‌. இதே வேளை மாகாண சபை தேர்தலை விரைவில்‌ நடத்த வேண்டியுள்ளது. இதற்கான உள்ளூராட்சி மன்ற சட்டத்தை நீக்கிவிட்டு முன்னைய முறைமையின்‌ கீழ்‌ தேர்தலை நடத்த முடியுமா? என்பது தொடர்பில்‌ கலந்துரையாடப்படும்‌.

உள்ளூரட்சிமன்ற தேர்தல்‌ சட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்‌டுள்ள சில திருத்தங்கள்‌ காரணமாக மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாமற்‌ போனது அச்சட்டத்திற்கு தேவையற்றவைகள்‌ சேர்க்கப்பட்டமை காரணமாக குழப்பமான நிலைமை உருவாகி உள்ளூராட்சி தேர்தல்‌ நடைபெறவில்லை.இந்நிலைமை தொடர்பில்‌ அவதானம்‌ செலுத்தி தேவையான தீர்மானங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு உள்ளூராட்சி தேர்தல்‌ நடாத்தப்படும்‌. இது தொடர்பில்‌ தற்போது பேச்சுவார்த்தைகள்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பினை மாற்றுவது தொடர்பில்‌ தற்போது அனைத்து விபரங்களையும்‌ வெளியிட முடியாது. பேச்சுவார்த்தைகளின்‌ பின்பு தீர்மானங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு மாகாண சபை தேர்தல்‌ நடாத்தப்படும்‌.

இது தொடர்பில்‌ தற்போது அனைத்து விபரங்களையும்‌ வெளியிட முடியாது. பேச்சுவார்த்தைகளின்‌ பின்பு தீர்மானங்கள்‌ மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதனால்‌ அரசியல்‌ அமைப்பு எவ்வாறு அமையும்‌ என இப்போதே தகவல்களைத்‌ தெரிவிக்க முடியாது. அரசியலமைப்பு மாற்றமடையவேண்டும்‌.

நாட்டின்‌ பிரச்சினைகளுக்குத்‌ தீர்வு வழங்கும்‌ வகையிலான அரசியலமைப்பே தேவையானதாகும்‌. கடந்த அரசாங்கத்தின்‌ ஆட்சியில்‌ நடந்தது போன்று அரசியலமைப்புத்‌ திருத்தம்‌ தொடர்ந்து இழுபறி நிலைக்குச்‌ செல்ல வேண்டிய அவசியமேற்படாது. இதுவிடயத்தில்‌ மக்களின்‌ கருத்துகளைக்‌ கோரவும்‌ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


காலையிலேயே தங்க விலைகளை SMS ஆக பெற்றுக்கொள்ள, கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும். T&C*

* Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available

VIAதயாசி லியனகே (தமிழில்‌: ஏ.ஆர்‌.ஏ. பரீல்‌)
SOURCEலங்காதீப