அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில், நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி, குற்றப் புலனாய்வு திணைக்கத்தினரால் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹிரு செய்திகள் hirunews.lk

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price