ஒரு நாடு, ஒரு சட்டம்‌ என்ற திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவோம்‌ – ஜனாதிபதி

புதிய அரசியல்‌ அமைப்பொன்றை உருவாக்குவோம்‌ எனக்கூறி மக்‌களின்‌ ஆணையை கேட்ட எமக்கு மக்களின்‌ ஆணை கிடைக்கப்‌பெற்றுள்ளது. எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய முதல்‌ வேலையாக 19ஆவது திருத்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்‌. அதன்‌ பின்னர்‌ சகலரும்‌ ஏற்கக்கூடியதும்‌ நாட்டிற்கு பொருத்தமானதுமான புதிய அரசியல்‌ அமைப்பினை உருவாக்குவோம்‌ என ஜனாதிபதி கோத்‌தாபய ராஜபக்‌ஷ தனது கொள்கை பிரகடன உரையில்‌ தெரிவித்தார்‌.

உறுதியான தீர்மானங்களை முன்‌னெடுக்க முடியாத, அடிப்படைவாத கோட்பாடுகளுக்கு அடிபணியும்‌ பலவீனமான பாராளுமன்றம்‌ நாட்டிற்கு பொருத்தமற்றது, எனவே புதிய அரசியல்‌ அமைப்பொன்று உருவாக்‌கப்படும்‌ நிலையில்‌ தற்போதைய தேர்தல்‌ முறைமையில்‌ மாற்றங்‌களை கொண்டுவருவோம்‌ எனவும்‌ அவர்‌ கூறினார்‌.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின்‌ முதல்‌ சபை அமர்வுகள்‌ நேற்று பிற்பகல்‌ 3 மணிக்கு ஆரம்பித்த நிலையில்‌ நேற்றைய தினம்‌ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின்‌ கொள்கை பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது. ஜனாதிபதியின்‌ உரையில்‌ அவர்‌ மேலும்‌ கூறுகையில்‌, கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌ 5 ஆம்‌ திகதி இடம்பெற்ற பொதுத்‌ தேர்‌தலானது இலங்கை பாராளுமன்ற தேர்தல்‌ வரலாற்றில்‌ விசேடமாக மாற்றமொன்றை உருவாக்கிய தேர்தலாகும்‌. உறுதியான ஆட்சி ஒன்றினை உருவாக்கிக்கொள்ள மூன்றில்‌ இரண்டு பெரும்‌பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்குமாறு மக்களிடம்‌ நாம்‌ கேட்‌டுக்கொண்டோம்‌. வரலாற்றில்‌ முதல்‌ தடவையாக விகிதாசார அடிப்படையில்‌ நடத்தப்பட்ட தேர்தல்‌ ஒன்றில்‌ மூன்றில்‌ இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வது என்பது ஸ்ரீலங்கா பொதுஜன முன்‌னணி மற்றும்‌ அதன்‌ கூட்டணி கட்சிகளுக்கு பெற்றுகொடுத்த நாட்டினை நேசிக்கும்‌ மக்களுக்கு நான்‌ நன்றிகளை தெரிவித்துக்‌கொள்கிறேன்‌.

நாட்டின்‌ அரசியல்‌ அமைப்பின்‌ பிரகாரம்‌ எனக்குள்ள பதவிக்‌ காலத்திற்குள்‌ நாட்டின்‌ ஒருமைப்பாட்டை பாதுகாப்பதுடன்‌ பெளத்த சாசனத்தை பாதுகாப்‌பதற்கும்‌ நான்‌ கடமைப்பட்‌டுள்ளேன்‌. அரச ஆட்சியை கொண்டு நடத்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள பிரதான பெளத்த தலைவர்கள்‌ கொண்ட ஆலோசனைக்‌ குழுவை நியமித்‌துள்ளேன்‌. அதேபோல்‌ தொல்‌பொருள்‌ பிரதேசங்களை பாதுகாக்‌கவும்‌ பெளத்த உரிமைகளை பாதுகாக்கவும்‌ விசேட செயலணியை உருவாக்கியுள்ளேன்‌. பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும்‌ அதே வேளையில்‌ ஏனையவர்களும்‌ அவர்கள்‌ விரும்பும்‌ மதத்தை பின்பற்ற இடமுள்ளது என்பது மக்களுக்கு நன்றாக உணார்த்தப்பட்டிருக்கும்‌.

Read:  மீண்டும் ரணில் !!

2019 ஈஸ்டர்‌ தாக்குதல்‌ காரணமாக நாட்டின்‌ தேசிய பாதுகாப்பு குறித்த நம்பிக்கை இல்லாத நிலையிலேயே மக்கள்‌ இருந்‌தனர்‌. எனினும்‌ எமது ஆட்சியின்‌ பிரதான கொள்கையான தேசிய பாதுகாப்பு பலப்படுத்தும்‌ நோக்கில்‌ பாதுகாப்பு மற்றும்‌ புலனாய்வை மீள்‌ புனரமைப்பதன்‌ மூலமாக மக்களின்‌ அச்சத்தை போக்கி மீண்டும்‌ நாட்டின்‌ தேசிய பாதுகாப்பு உருவாக்கியுள்ளோம்‌. சகலரும்‌ சுதந்தரமாக சுயற்படும் ‌சூழலை உருவாக்கிக்கொடுத்‌துள்ளோம்‌.

மேலும்‌ இந்த நாட்டில்‌ பெரும்பான்மையானவர்கள்‌ சுயதொழில்‌ மற்றும்‌ விவசாயத்தை நம்பி வாழ்‌கின்றனர்‌. எனவே அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாம்‌ முன்னெடுப்போம்‌. வேலையில்லா பிரச்சினை இன்று பாரிய சமூக பிரச்சினையாக மாறியுள்‌ளது. எனவே கஷ்டப்படும்‌ குடும்‌பங்களை இலக்குவைத்து ஒரு இலட்சம்‌ வேலைவாய்ப்புகளை வழங்கவும்‌ பட்டதாரிகளுக்கு 60ஆயிரம்‌ வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கவும்‌ அரசாங்கம்‌ வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள கட்டுப்பாடுகளுக்கு அப்பால்‌ சிந்திக்க வேண்டும்‌. தேசிய உற்பத்தியை போன்று ஏற்றுமதி குறித்தும்‌ சிந்திக்க வேண்டும்‌.

தேயிலை, தென்னை, இறப்பர்‌ உற்பத்திகளை ஊக்குவிப்போம்‌, ஏனைய ஏற்றுமதி பொருட்களுக்குமான ஊக்குவிப்பு நடவடிக்‌கைகள்‌ முன்னெடுக்கப்படுகின்‌றது. அத்துடன்‌ மக்களின்‌ வீட்டு பிரச்சினைக்கு அரசாங்கம்‌ விசேட முக்கியத்துவம்‌ கொடுகின்றது. மீன்பிடி, விவசாய துறைகளில்‌ பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்‌.

இவை அனைத்தையும்‌ முறையாக கையாளும்‌ வகையில்‌ இராஜாங்க அமைச்சுக்களை உருவாக்கி அவர்களுக்கான பொறுப்‌புகள்‌, கடமைகள்‌ வழங்கப்பட்டுள்‌ளது. வெவ்வேறு பொறுப்புகளை கொடுத்து இராஜாங்க அமைச்‌சுக்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவித தடைகளும்‌ இல்லாது இராஜாங்க அமைச்சர்கள்‌ தமது கடமைகளை முன்னெடுக்க முடியும்‌. அத்துடன்‌ மக்களுக்கு கொடுக்கும்‌ சேவைகளை சகலரும்‌ முறையாக முன்னெடுக்கவேண்டும்‌. மக்களுக்கு இலகுவாக சேவையை முன்னெடுக்கக்‌கூடிய மாற்று வழிமுறைகளை அதுவும்‌ தொழிநுட்ப முறைமைகளை பின்பற்ற வேண்டும்‌.

மேலும்‌ ஜனநாயக ஆட்சியின்‌ ௮டையாளமும்‌ வெற்றியும்‌ அதன்‌ அரசியல்‌ அமைப்பிலேயே தங்கியுள்ளது. 1978 ஆம்‌ ஆண்டு தொடக்கம்‌ 19 தடவைகள்‌ அரசியல்‌ அமைப்பு திருத்தப்பட்டுள்ள நிலையில்‌ அதில்‌ ஏற்பட்டுள்ள உறுதியற்றதன்மைகள்‌ காரணமாக நாட்டில்‌ பல குழப்பங்கள்‌ ஏற்பட்டுள்ளது. அரசியல்‌ அமைப்பு திருத்தத்தை முன்னெடுக்க நாம்‌ மக்களிடம்‌ கேட்ட மக்கள்‌ ஆணையை மக்கள்‌ எமக்கு கொடுத்துள்ள காரணத்தினால்‌ நாம்‌ மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய முதல்‌ கடமையாக 19 ஆம்‌ திருத்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்‌. அதன்‌ பின்னர்‌ சகலருக்கும்‌ ஏற்கக்கூடியதும்‌ நாட்டிற்கு பொருத்தமானதுமான
புதிய அரசியல்‌ அமைப்பினை நாம்‌ உருவாக்குவோம்‌. இதன்போது சகல மக்களுக்குமான ஒரு நாடு, ஒரு சட்டம்‌ என்ற திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவோம்‌.

Read:  மீண்டும் ரணில் !!

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

VIAவிடிவெள்ளி 21-08-20
SOURCE(ஆர்‌.யசி, எம்‌.ஆர்‌.எம்‌.வசிம்‌)