கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படுபர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 விஷேட வைத்தியசாலைகள்

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குறித்த 4 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களும், நோய் அறிகுறிகளுடனும் இனம் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் இந்த வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleஜனாஸா அறிவித்தல் – அப்துல் வஹாப் ஹாஜி
Next articleஇலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் டாலர் – ம.வங்கி