முஸ்லிம் விவாகப் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்

முஸ்லிம் விவாகப் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள் (Documents)

1 மணமகனின் பிறப்புச் சாட்சிப் பத்திரம் (Birth Certificate)

2 மணமகனின் தேசிய ஆள் அடையாள அட்டை(National Identity Card)

3 மணமகளின் பிறப்புச் சாட்சிப் பத்திரம் (Birth Certificate)

4 மணமகளின் தேசிய ஆள் அடையாள அட்டை (National Identity Card)

5 தங்கள் மஹல்லா பள்ளி வாசல் நிர்வாகத்தினரால் உறுதி செய்து கையொப்பமிடப் பட்ட ‘நிகாஹ்’ நடத்துவதற்கான அனுமதிப் படிவம்.

6 முன்னைய கணவன் அல்லது முன்னைய மனைவி தற்போது உயிருடன் இல்லா விட்டால் அவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரம்.

7 விவாகரத்து செய்யப் பட்டிருந்தால் குவாஸி நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட விவாகரத்துக்கான அத்தாட்சிப் பத்திரம்.

8 வலியாக(பொறுப்புதாரர்) மணமகளின் தந்தை இல்லாத பட்சத்தில் அவரது மரண அத்தாட்சிப் பத்திரம்.

9 மணமகளின் தந்தை இல்லாத விடத்து ஏனைய வலிகாரரின் (பொறுப்பாளியின்) தேசிய ஆள் அடையாள அட்டை

10 மணமகளின் தந்தை அல்லாத வேறு வலிகாரர் (பொறுப்பாளி) ‘வலி’யாகப் பொறுப்பேற்கும் போது உரிய விண்ணப்பப் படிவத்தில் மணமகள் தனது கையொப்பத்தை இட்டு உறுதிப் படுத்தல் வேண்டும்.

11 திருமணப்பதிவு நடை பெற்று (3) மூன்று நாட்களின் பின்னர் சான்றிதழ் (Marriage Certificate) வழங்கப்படும்.

குறிப்பு: மேற் கூறியவற்றில் தேவையான ஆவணங்களை (Documents ) பதிவு நடை பெறுவதற்கு குறைந்த பட்சம் (5) ஐந்து நாட்களுக்கு முன்னராவது விவாகப் பதிவாளரிடம் ஒப்படைத்த பின்னரே உங்களுக்கான விவாகப் பதிவுக்குறிய திகதியும், நேரமும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு : 071 7280 499 / 077 668 5599 அல்லது 081-5682088

Read:  Akurana Power Cut Time