வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி – ஒரு மாத விபரம்

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (08.04.2020) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபாவைக் கடந்துள்ளது.

இன்றைய தினம் புதன்கிழமை டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 193 ரூபா 95 சதமாகவும் விற்பனை விலை 200 ரூபா 46 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?