வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு கழிவறைகள் – அக்குறணை பிரதேச சபை

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு கழிவறைகள் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார்

அக்குறணை பிரதேச சபை எல்லைக்குள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கழிவறைகள் வசதி இல்லாத
குடும்பங்களுக்கு கழிவறைகளை அமைக்க அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தனிப்பட்ட முறையில்
நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி இவ்வாறு 400 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி வாழ்வதாக அறிய வந்துள்ளது. இதனை அடுத்து தவிசாளர் மேற்கொண்ட நடவடிக்கையின் படி தனவந்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உதவியுடன் மேற்படி திட்டத்தை பிரதேசபையின் அணுசரணையில் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே வேளை அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தகர்கள், தனவந்தர்கள், பொது அமைப்புக்கள்
என்பவற்றின் கூட்டு முயற்சியால் 30 ற்கும் மேற்பட்ட மலசல கூடங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்டமாக மேலும் 40 மலசலகூடங்களை உடனடியாக நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்புக்களை தமது தலைமையில் அக்குறணை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினக்குரல் 20-8-2020

Read:  அக்குறணை வெள்ள அனர்த்தத்தை தடுக்க செயற் திட்டம்