நாட்டில் வாகன டயர்களுக்கு பற்றாக்குறையா?

வெளிநாட்டிலிருந்து டயர்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தியமையால் உள்நாட்டில்  சில வகை வாகனங்களுக்கான டயர்கள் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக வாகன உரிமையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத் தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நாட்டின் தேவையைக் கருத்திற்கொண்டு கணிசமான அளவு டயர் களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இலங்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில வகையான வாகனங்களுக்கு பொருந்தக்கூடிய டயர்களை இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

குறித்த டயர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவை குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா