கொழும்பு நகர இளைஞர், யுவதிகள் சினோபாமில் ஆர்வம் காட்டவில்லை

கொழும்பு நகர இளைஞர்கள், யுவதிகள் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி துள்ளார்.

குறித்த பிரிவினர் பைசர் த டு ப் பூ சி கி ø டக்கும் வரை காத்திருப்பதாகவும் கொழும்பு நகர எல்லைக்குள் இளைஞர்கள், யுவதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்துபவரின் எண்ணிக்கை மிகவும் மந்தமான நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நகர எல்லைகளில் உள்ள இளைஞர்கள், யுவதிகளின் எண்ணிக்கை 97,000 என்றாலும், தற்போது வரை மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள் மாத்திரமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பைசர் தடுப்பூசி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குப் பாதுகாப்பானது என்ற அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அவர்கள் உருவாக்கியதே இதற்குக்காரணம் என்றும் அதில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleமத்தல விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு- தெற்கில் பரபரப்பு
Next articleநாட்டுக்கு அவசியமான புதிய கல்விக் கொள்கை தயாரிப்பு