எதிர்காலத்தில் விலை மேலும் அதிகரிக்கும்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை தற்போது அதிகரிப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதை சிங்கள ஊடகம் ஒன்று வெளிக்கொண்டுவந்துள்ளது.

முன்பு  250,000 – 275,000 ரூபாய் வரை இருந்த சில கைத்தொலைபேசிகளின் விலை இப்போது 350,000 ரூபாயை தாண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த பொருட்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

டொலரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். R -தமிழ் மிற்றோர்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter