A.C.S ஹமீட் – உலகத்தை ஈர்த்த வெளிநாட்டமைச்சர்

வழமையாக 150 க்கும் அதிகமான தேசியத் தலைவர்களும் அரசாங்க தலைவர்களும் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கு பற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வருடாந்த பொதுச் சபை அமர்வுகளுக்கு இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான வெளி நாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இத்தகைய ஒரு அமர்வின் போது இலங்கையின் வெளி நாட்டு அமைச்சர் ஏ.சீ.ஸ். ஹமீதுக்கு மறக்க முடியாத ஓர் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு முறை இலண்டனைச் சேர்ந்த ஈழ ஆர்வலரும் வழக்கறிஞருமான கிருஷ்ணா வைகுண்ட வாசன் என்பவர் நுழைவாயிலைத் தகர்த்துக் கொண்டு இரகசியமாக ஐக்கிய நாடுகளின் சபைக்குள் உள் நுழைந்து ஹமீதை மீறி பொது மாநாட்டு அரங்கத்தின் மேடைக்குச் செல்ல முற்பட்டதோடு , சிறிது நேரத்தில் பேச்சாளரின் இடத்தையும் பற்றிக் கெண்டார்.

ஐக்கிய நாடுகள் சபை வரலற்றில் இது ஓர் அரிய நிகழ்வாகவே இருந்தது. அந்நபர், இலங்கை அரசு வட இலங்கையில் தனித் தாயகத்துக்காக போராடிய தமிழருக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி அரசாங்கத்துக்கு எதிராக வசைமாரி பொழிந்ததோடு அரசாங்கம் போர்க் குற்றங்களைச் செய்ததற்காகவும் குற்றம் சுமத்தினார்.

அப்போது, அந்த நபர் அனுமதியின்றி ஊடுருவியுள்ளார் என்பதை உணர்ந்த சபைத் தலைவர் மைக்கைத் துண்டித்து அவரை மண்டபத்திலிருந்து உடனே வெளியேற்றுமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அத்தோடு அந்நபருக்கு சபை வளாகத்தில் நுழைவதற்கும் தடை விதித்தார்.

பின்னர் ஹமீத் தனது உரையை நிகழ்த்த மேடையை நோக்கி நடந்த போது சபை மண்டபத்துக்குள் பெரும் அமைதி நிலவியது.

அப்பொழுது இலங்கைக்கான தூதுக்குழுவின் ஒரு அங்கத்தவர் என்ற வகையில் நான் ஹமீதுக்கு பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தேன். இலகுவில் எவராலும் மடக்கி விட முடியாத ஹமீத் தூதுக்குழுவின் எந்தவொரு அங்கத்தவரதும் தூண்டுதல் இல்லாமலேயே நகைச்சுவையோடு தனது உரையை ஆரம்பித்தார். அவர், “மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே எனக்கு முந்தைய பேச்சாளர் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டமைக்கு நான் முதலில் அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று உரையை ஆரம்பித்த போது அது. சபையில் நிகழ்த்தப்பட்ட நீண்ட உரைகளால் சலிப்படைந்திருந்த சபையினரை சிரிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. இவ்வாறு அன்று அங்கு ஊடுருவிய நபர் மீதான சபையின் கவனத்தை வெளிநாட்டு அமைச்சர் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

இவ்வாறான ஹமீதின் நகைச்சுவை உணர்வு ஐக்கிய நாடுகள் சபை எல்லைகளுக்கும் அப்பால் சென்றது. ஒருமுறை நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது அவர் ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தார் என்ற விமர்சனத்திற்கு உள்ளான போது, அது பற்றி அவர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி எம். பீக்களுக்கு கிண்டலாக பதிலளித்தார் “வெளிநாட்டு அமைச்சர் என்ற வகையில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது நான் எங்கே தங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்? “ தோசைக் கடையிலா?” என்று அவர் கேட்டார்.

அது மற்றொரு வகையில், ஹல்ஸ்டோபில் உள்ள அம்பால் கஃபே அல்லது பம்பலபிட்டியவில் உள்ள சரஸ்வதி லொட்ஜில் ஓர் அறையாகவோ அல்லது நிவ்யோக்கின் லெக்சின்டன் அவனியுவிலுள்ள சரவனபவன் ஆகவோ கருத முடியும்.

ஹமீத் தனது வழக்கமான தங்குமிடமாக ஒன்றில் நிவ்யோக் ஹயட் ரீஜன்சி , இன்டர்நேஷனல் பார்க்லே, த வோல்டோஃப் அஸ்டோரியா அல்லது பலஸ் ஹோட்டலையே தேர்ந்தெடுப்பார். ஐக்கிய நாட்டு அமர்வுகளுக்கு வருகை தரும் ஏனைய வெளிநாட்டு அமைச்சர்களின் பாணியிலேயே அவரும் நடந்து கொண்டார். அதிகமாக உலகத்தை வலம் வருபவர் என்ற வகையில் அவர் இடைக்கிடையே வெளிநாட்டு விமானங்களுக்கு மாறுவதற்கு மட்டுமே கொழும்பில் தங்கியிருந்தார். ஹமீதைப் பொறுத்தளவில் அவர் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாகவே இருந்தார். 1977 இலிருந்து வெளிநாட்டமைச்சர் என்ற வகையில் அவரது பதவி காலத்தின் ஒவ்வொரு நொடியையும் மிகவும் ரசித்துக் கடத்தினார். ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவோ அந்த வளாகத்திற்கு வருகை தரவோ இல்லை என்பதால் (1983 ஏப்ரலில் வொஷிங்டன் டீ.சீக்கு இராஜாங்கப் பயணத்தை மேற் கொண்டு வோல்டோப் அஸ்டேரியாவில் தங்கியிருந்த போது கூட ) அவரால் அவ்வாறு இருக்க முடிந்தது. ஜே.ஆர் அவ்வாறு ஐக்கிய நாடுகளின் சபைகளை தவிர்த்ததற்கான காரணங்களும் மர்மமாகவே இருந்தன.

1976– 1979 ஆண்டுக் காலப் பகுதியில் இலங்கை அணிசேரா நாடுகளின் அமைப்புக்குத் தலைமை தாங்கியது, 1970களின் நடுப்பகுதியில் காணப்பட்ட சில சர்வதேச பிரச்சினைகளுக்குத் தலைமை தாங்க ஹமீத் தொடர்ந்தும் அழைக்கப்பட்டார். குறிப்பாக இதில், இரு கம்போடிய பிரிவுகள் ஐக்கிய நாடுகளின் இருக்கைக்கு உரிமை கோரியது. (ஐக்கிய நாடுகளின் சட்ட ஆலோசகர்களின் ஆதரவுடன் சர்ச்சையைத் தீர்க்க உதவும் வகையில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தியதால் அன்றைய பொதுச் சபை அமர்வு நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்தது)

மேலும் மற்றொரு சர்ச்சையாக எகிப்து 1978 இல் இஸ்ரவேலுடன் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் அது அணிசேரா நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா? தென்னாபிரிக்காவின் மக்ரெப் பிராந்தியத்தின் மேற்கு சஹாராவின் சர்ச்சைக்குரிய பிரதேசம் தெடர்பாகவும் அப்கானிஸ்தானின் சோவியத் படையெடுப்பினால் ஏற்பட்ட பிளவுகள் போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஹமீத் தலைமை வகித்த அதே சமயம் இந்த சர்ச்சைகள் தொடர்பாக அணிசேரா நாடுகளிடையே பல பிரிவுகள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (1979 -1989)

அவர் தீர்ப்பளிக்கும் சந்தர்ப்பங்களில் பொதுச் சபை அமர்வுகளில் போது ஹமீதின் நெருங்கிய ஆலோசகர்களில் சிறந்த இரு தொழில் இராஜதந்திரிகளான ஜயந்த தனபால, நிஹால் ரொட்றிகோவும், அவர்களோடு இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரும் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் தூது வருமான ஏனஸ்ட் கொரியாவும் அங்கிருந்தனர்.

ஏனஸ்ட் என்பவர் ஹமீத் வெளிநாட்டமைச்சராக நியமனம் பெற முன்னிருந்தே அவரது நீண்டகால நண்பனாக இருந்தார். அத்தோடு மரபு நெறிமுறைகளுக்கு அப்பால் சென்று அவரின் முதற்பெயரான “ஷாஹுல்” என்று அவரை அழைக்கும் ஒரே யொரு இலங்கைத் தூதுவராகவும் அவர் காணப்பட்டார்.

ஏனஸ்ட் ஒரு முறை என்னிடம் இவ்வாறு கூறினார் ஷாஹுல் அவரது வாழ்க்கையில் நிறைய சவால்களைச் சந்தித்துள்ளார். அதில் ஒன்று அவர் தோற்றத்தில் உயரம் குறைவாக இருந்தது. ஆனால் அவருக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு விவகாரங்களை நிர்வகிப்பதாகும். எனது நினைவுக்கெட்டிய வரை பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் நேரடித் தலையீடுகள் இல்லாமல் நிர்வாகத்தினை கொண்டு நடாத்திய முதல் வெளிநாட்டமைச்சராக அவர் இருந்தார். முதலில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இரண்டும் ஒரே நிர்வாகத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி ஜயவர்தனா அவர்களால் அப் பணிகளை சமாளிக்க முடியாத நிலையில் கொழும்பின் வெளியுறவுக் கொள்கை வகுத்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் தரமிறக்கப்பட்டதாக பரவலான கருத்து நிலவியது. ஆனால்” ஷாஹுல் அவை அனைத்தும் தவறானவை நிரூபித்தார் என ஏனஸ்ட் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் ஓய்வறையில் ஒரு பகுதியில் ஹமீத் ஒரு நீதிமன் றத்தை வைத்திருப்பதைப் போலவே காட்சியளித்தது. அவர் சுருட்டுப் பிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தார். ஆனாலும் அவை 1979 ஆம் ஆண்டு அணிசேரா அமைப்பின் தலைமைத்துவத்தை இலங்கை பிடெல் கஸ்ரோவிடம் கைய ளிக்க முன் அடிக்கடி அவர் சென்று வரும் கியூபாவின் தலை நகரமான ஹவானாவில் இருந்து பெற்றுக் கொண்ட மிகச் சிறந்த தரமுடைய சுருட்டு வகைகளாக இருந்தன.

பாராளுமன்றத்துக்குள், நம்பகமற்ற லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்கா போன்றவர்களோடு அணிசேராமையை வழிநடத்துவது அவருக்கு பெரும் தலையிடியாக இருந்தது. ஜே.ஆரும் அவ்வாறான ஒருவராகவே இருந்தார். என்றாலும் அத்தருணங்களை ஹமீத் அவருக்கேயுரிய பொறு மையாலும் விடாமுயற்சியாலும் பின்னடையாமல் தொடர்ச்சியாகக் கொண்டு நடத்தினார்.

வெளிநாட்டமைச்சர் என்ற வகையில் அவர் அடைந்த மகிழ்ச்சியான தருணம் தான், ஹவானா உச்சி மாநாட்டின் போது ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் பிடல் கஸ்ட்ரோவிடம் “ஹமீதின் முயற்சியால் தான் மாசற்ற விதத்திலும் மறுக்க முடியாதவாறும் இலங்கை அரசுக்கு கியுபாவிடம் அணிசேராமையின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க முடிந்தது” என்று கூறிய தருணமாகும்.

இது ஹமீத் அவர்கள் வெளியுறவு அமைச்சர் பதவியை நீண்ட நாட்களுக்கு வகிக்க முடியாமல் போகும் என்று அவரது சொந்த கட்சிக்குள்ளேயே காணப்பட்ட யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது. ” உண்மை என்னவென்றால் ஒரு சிலர் அறிந்திருந்தது போலவே ஹமீதுக்கு சர்வதேச உறவுகளில் ஓர் சிறப்பான புரிந்துணர்வு இருப்பதாக ஜே.ஆர். ஜயவர்த்தனாவும் உணர்ந்திருந்தார். அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர்களும் இதைப் புரிந்து கொண்டிருந்தனர். அவரிடம் சில தவறுகள் இருந்தன. தவறுகள் யாரிடம் தான் இல்லை” என்று ஏனஸ்ட் கூறினார்.

“அவர் எம்மத்தியில் இப்போது இன்மையால் அவரை இப்போது விமர்சிப்பவர்களோடு நானும் ஒருவனாக சேர்ந்து கொள்ள விரும்பவில்லை. மாறாக அவருடன் பணியாற்றிய எங்களதும், அவரது வேலைகளில் கவனம் செலுத்திய ஏனையோரினதும் பார்வையில் அவர் பல துறைகளில் சிறந்து விளங்கினார் என்பதையே நினைவூட்ட விரும்பு கிறேன்”

முக்கியமாக அவர் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சியுடையவராக இருந்தார். இது அவரது சகாக்களிடையே அவருக்கு சிறப்பான இடத்தை பெற்றுக் கொடுத்தது. அடுத்தது அவருக்கிருந்த அற்புதமான நினைவாற்றலாகும்.

முக்கியமாக ஆவண வரைவு ஒன்றுக்கான அமர்வின் போது சரியான தருணத்தில் இடைநடுவில் கூட அது தொடர்பாக அவர் மனதிலிருக்கும் ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ அல்லது ஒரு பொதுக் கொள்கை அறிக்கையொன்றில் அதற்கான பொருளையும் ஆழத்தையும் பெறக்கூடிய முக்கியமான உசாத் துணை ஒன்றையோ துல்லியமாகப் பெறக் கூடியதாக இருந்தது.

இலங்கை இந்திய உறவானது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு இன்றியமையாத கூறு என்பதில் அவரின் சகாக்களுக்கு இல்லாத உறுதி அவருக்கு இருந்தது என ஏனஸ்ட’ குறிப்பிட்டார்.

இன்னுமொரு விடயத்தையும் முக்கியமாக கூற வேண்டும். அது ஒரு தனிப்பட்ட விடயமாகும். அவர் பரந்த விளக்கங்களுடன் கூடிய ஒரு சிறந்த பேச்சாளர். நம்மில் பெரும்பாலானோர் தயாராக இல்லாத ஒரு சிக்கலான பிரச்சினை தொடர்பாக இடம் பெறும் விவாதங்களில் கூட தலையிட்டு சிறப்பாக விவாதிக்க அவரால் முடியும். ” இதோ நான் காத்திருந்த தளர்வான பந்து என்று அவர் தனக்குத் தானே கூறிக் கொள்வார் என ஏனஸ்ட’ குறிப்பிட்டார்.

நகைச்சுவை கலந்த சுய விமர்சனத்தை விரும்பும் ஹமீத் தன்னை தாக்கி வரையப்பட்ட கேலிச்சித்திரங்களின் தொகுப்பொன்றை வெளியிட நிதியுதவி அளித்தார். அதில், ஒரு பெரிய பூகோளத்திற்கு முன்னால் உட் கார்ந்தவாறு “ தேடிப் பார்ப்போம், வேறு எந்தெந்த நாடுகளுக்கு நான் இன்னும் விஜயம் செய்ய வில்லை என்று ” என்ற வாசகத்தோடு அமைந்த குறித்த ஒரு கேலிச்சித்திரத்தை அவர் வெகுவாக விரும்பினார்.

அத்தோடு அவரது முதலெழுத்துக்களான ACS என்பது ஆங்கிலத்தில் “எல்லா நாடுகளையும் பார்த்து விட்டேன்” (All Countries Seen) என்பதாகவே உச்சரிக்கப்பட்டது.

அத்தோடு அவர் விரும்பிய மற்றுமொரு கேலிச்சித்திரம் தான், 1978 இல் மிகவும் சோர்வடைந்த நிலையில் கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு வந்த ஹமீத் ஒரு வழிப்போக்கனிடம் மிகவும் அப்பாவித்தனமாக இவ்வாறு கேட்கிறார் .

“அன்பானவரே , ஹாரிஸ்பத்து வைக்கு போகும் வழியை காட்ட முடியுமா?”

அவரது சொந்த ஊரான அக்குரணை அமைந்திருந்த அவருடைய தேர்தல் தொகுதி பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும். பாராளுமன்றத்திற்கு நீண்ட காலமாக அவர் தொடர்ந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அது அவரது வாக்காளரிடையே அவருக்கிருந்த அரசியல் ரீதியான உறவுக்கு கிடைத்த நன்மதிப்பாகவே கொள்ள வேண்டும்.

இக் கேலிச்சித்திரங்கள் 1970களில் இலங்கையின் புகழ்பெற்ற டப்ளியூ. ஆர். விஜேசோம , ஜிப்ரி யூனூஸ், மார்க் கேரியன், அமிதா அபேசேகர உள்ளிட்ட மற்றும் சில கலைஞர்களின் கேலிச் சித்திரங்களில் இருந்து பெறப்பட்டவையாகும். தன்னைத் தானே பார்த்து சிரிக்கக் கூடிய தன்மை என்பது ஒரு பெரும் அருட்கொடையாகும் என்று ” “திரு.வெளிநாட்டு அமைச்சர்” (Mr Foreign Minister) என்ற நூலுக்கான அறிமுக உரையில் விஜேசோம அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அவர் சிரித்தார் எனினும் அது கூட அவருக்கு மறைமுக நன்மையாகவே அமைந்தது என்று நான் நம்புகிறேன்.

ஓஸ்கார் வைல்ட் என்பவர் ஒருமுறை இரண்டு வகையான சித்திரவதைளுக்கிடையேயான வேறுபாட்டை சுட்டிக் காட்டினார். அது, உடல் வதையும் ஊடக வதையும் ஆகும்.

எந்த ஒரு அரசியல்வாதியிடம் கேட்டாலும் சொல்வார்கள் அவர் கொழும்பிலுள்ள செய்தி ஆசிரியர் அலுவலகங்களிலும் செய்திப் பீடங்களிலுமுள்ள அதிகம் சித்திரவதை செய்யும் அறையையே தேர்ந்தெடுப்பார்.

தாலிப் டீன் – விடிவெள்ளி 9/9/21


Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page