இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கும் – இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேசங்களின் பொது வாழ்ப்பு பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

Previous articleமுஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதற்கு யார் காரணம்? கண்டி, களுத்துறை, கொழும்பு, குருநாகல், ஒரு அலசல் பார்வை
Next articleமுஸ்லிம்களுக்கு இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீதியமைச்சர் அலி சப்ரி உடந்தையாக்கப்படுவாரா?