சமூக தனிமைப்படுத்தல் – கூகுள் வெளிப்படுத்தவுள்ள முக்கிய விடயம்

கொவிட் – 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சமூக தனிமைப்படுத்தல் மூலம் (Social distancing) மக்களை வீட்டுக்குள் முடக்குவதற்கு கடைப்பிடிக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எந்தளவுக்கு பயனுறுதியுடையவையாக இருக்கின்றன என்பதை அரசாங்கங்கள் விளங்கிக்கொள்வதற்கு உதவுமுகமாக மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் உலகம் பூராவுமுள்ள அதன் பயனாளிகளின் இருப்பிடங்கள் மற்றும் நடமாட்டம் பற்றிய தகவல்களை வெளியிடவிருக்கிறது. 

131 நாடுகளில் உள்ள பயனாளிகளின் நடமாட்ட விபரங்கள்   விசேட வலைத்தளம் ஒன்றில் வெளியிடப்படும் என்றும் நடமாட்டப் போக்ககள் பற்றிய விபரங்கள் இடங்களின் புவியியல் அமைப்பொழுங்கில் அவ்வப்போது பதிவுசெய்யப்படும் என்றும் கூகிளின் வலைத்தளமொன்றில் செய்யப்பட்ட பதிவொன்று கூறுகிறது.

பொழுதுபோக்கு இடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் மற்றும் வேலைத்தலங்களுக்கு பெப்ரவரி 16 தொடக்கம் மார்ச் 29 வரையான காலகட்டத்தில் பயனாளிகள்  மேற்கொண்ட போக்குவரத்துக்களை இவ்வருட ஆரம்பத்தில் ஒரு ஐந்து வாரங்களில் அவர்களின் நடமாட்டங்களுடன் ஒப்பிடும் பட்டியலை கூகிள் வெளியிட்டிருக்கிறது என்றும் அந்த பட்டியலில் காணப்டுகின்ற போக்குகள் பூங்காக்கள், கடைகள், வீடுகள் மற்றும் வேலைத்தலங்கள் போன்ற இடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய விஜயங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி இருப்பதை காட்டும்.

ஆனால், விஜயங்களின் திட்டவட்டமான எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இருக்காது என்றும் கூகிளின் அந்த வலைத்தளம் கூறியிருக்கிறது. பட்டியலில்  கூகிள் வரைபடப்பிரிவின் ( Google Maps) தலைவர் ஜென் ஃபிற்ஸ்பட்ரிக்கும் கம்பனியின் பிரதம சுகாதார அதிகாரி காரென் டிசால்வோவும் கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.

பிரான்சில் உணவகங்கள், மதுபானவிடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள், கடைத்தொகுதிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கனவுப் பூங்காக்களுக்கான விஜயங்களுக்கான நடமாட்டங்கள் அவற்றின் வழமையான மட்டங்களில் இருந்து 88 சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டிருப்பதை தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 

Read:  மீண்டும் ரணில் !!

சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முதலில் அறிவிக்கப்பட்டபோது உள்ளூர் கடைகளுக்கான விஜயங்களின் எண்ணிக்கையில் ஆரம்பத்தில் 40 சதவீத அதிகரிப்பு காணப்பட்டது.ஆனால், பிறகு அது 72 சதவீதத்துக்கு குறைந்தது.

இந்தியாவில் உணவகங்கள், மதுபானசாலைகள் மற்றும் திரையரங்குகள் போன்ற இடங்களுக்கான விஜயங்கள் 77 சதவீதத்துக்கு குறைந்தன.” இந்த தகவல் அறிக்கைகளினால்  கொவிட் — 19 தொற்றுநோயை எவ்வாறு  கையாளுவது  என்பது குறித்து தீர்மானங்களை எடுப்பதற்கு உதவமுடியும்.

வர்த்தக நேரங்கள் அல்லது சேவைகளை வழங்குதல் குறித்து அறிவிப்புகளுக்கான அத்தியாவசியமான பயணங்களில் செய்யப்படவேண்டிய  மாற்றங்களை அதிகாரிகள் விளங்கிக்கொள்வதற்கும் இந்த தகவல்கள் உதவமுடியும் ” என்று கூகிளின் உயர்மட்ட அதிகாரிகள் கூறினார்கள்.

   தனிமனிதர்களின் இருப்பிடங்கள், தொடர்புகள் அல்லது நடமாட்டங்கள் போன்ற ‘ தனிப்பட்டமுறையில்  அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய’ தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படமாட்டாது என்று கூகிளின் வலைத்தளப்பதிவில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 

சீனா, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள்  வைரஸ் பரவலைக் கட்டுப்டுத்துவதற்கு அவற்றின் பிரஜைகளை இலத்திரனியல் கண்காணிப்புக்கு உட்படுமாறு உத்தரவிட்டிருக்கின்றன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலநுட்ப நிறுவனங்கள் வைரஸ்பரவலை சிறப்பான முறையில்  கண்டுபிடிக்க தனிப்பட அடையாளப்படுத்தல்கள நீக்கப்பட்ட ஸ்மார்ட்போன் செயலிகளை ( Smartphone apps) பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. ஜேர்மனியும் தொற்றைக் கண்டறிய இத்தகைய  செயலிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்கிறது.

ஆனால், எதேச்சாதிகார அரசாங்கங்கள் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தவும் பேச்சுச்சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் ஒரு போர்வையாக பயன்படுத்துவதாக அரசியல் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். 

பரந்தளவிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் தனிநபர் உரிமைகளிலும் டிஜிட்டல் உரிமைகளிலும் ( Privacy and digital rights) பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற பயம் தாராள ஜனநாயக நாடுகளில் காணப்படுகிறது.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!
SOURCEBBC