கொரோனா என்பது நோய் அல்ல- நான் இரண்டே நாட்களில் குணப்படுத்துவேன்- ரஞ்சித் விலச்சிய

கொரோனா வைரஸ் நோயாளரை இரண்டு நாட்களுக்குள் குணப்படுத்தும் மருந்துகள் தன்னிடம் இருப்பதாக அனுராதபுரத்தைச் சேர்ந்த ஆயுர்வேதத்தில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித் விலச்சிய தெரிவித்துள்ளார்.

இந்த மருந்துக்காக தனக்கு பணம் தேவையில்லை என தெரிவித்த அவர், கொரோனா என்பது ஒரு நோய் அல்லவெனவும் குறிப்பிட்டார்.

ஆயுர்வேத அமைச்சர் தன்னை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து இது தொடர்பான புத்தகத்தை கேட்டதாகவும், ஆனால் தான் வேறு புத்தகமொன்றை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தன்னை மீண்டும் தொலைபேசியில் அழைத்து மருந்து செய்முறையை கேட்டதாகவும் ரஞ்சித் விலச்சிய குறிப்பிட்டார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

-தமிழன்.lk

Read:  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்