கண்டி மாவட்டத்தில்‌ ஸ்புட்னிக்‌ முதல்‌ தடுப்பூசிகளை பற்ற ஒரு லட்சத்துக்கும்‌ மேற்பட்டோரின்‌ நிலைமை என்ன?

கண்டி மாவட்டத்தில்‌ ஸ்புட்னிக்‌ முதல்‌ தடுப்பூசிகளை பற்ற ஒரு லட்சத்துக்கும்‌ மேற்பட்டோரின்‌ நிலைமை என்ன? லஷ்மன்‌ கிரியல்ல கேள்வி

கண்டி மாவட்டத்தில்‌ ஸ்புட்னிக்‌ முதலாவது டோஸினைப்‌ பெற்ற ஒரு இலட்சத்‌திற்கும்‌ மேற்பட்ட மக்கள்‌ இன்று ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும்‌ இதற்கு அரசாங்‌கத்தின்‌ பதில்‌ என்ன என்று ஐக்கிய மக்கள்‌ சக்‌தியின்‌ கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்‌பினர்‌ லஷ்மன்‌ கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்‌.

கண்டியிலுள்ள அவரது இல்லத்தில்‌ இடம்‌ பெற்ற ஊடகவியலாளர்‌ சந்திப்பில்‌ அவர்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌. ஸ்புட்னிக்‌ தடுப்பூசியின்‌ முதலாவது டோஸினை ஒரு இலட்சத்து 22 ஆயிரம்‌ பேர்‌ பெற்றுள்‌ளனர்‌. இந்நிலையில்‌ அவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கும்‌ மேலாக இரண்டாவது டோஸ்‌ கிடைக்கவில்லை.

மேற்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இத்தடுப்‌பூசி செலுத்தப்பட்டதுடன்‌ விஷேட தேவைக்‌கருதி 60 வயது குறைவானவர்களுக்கும்‌ இத்தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும்‌ மையங்களில்‌ கடமையாற்றிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்‌ .பிரதேச செயலக உறுப்பினர்கள்‌ பெருந்தோட்ட முகாமையாளர்கள்‌. உதவி முகாமையாளர்கள்‌ வெளிக்கள உத்தியோகத்தர்கள்‌. ஒரு சில அதிபர்‌, ஆசிரியர்கள்‌. கிராம சேவகர்கள்‌. ஊடகவியலாளர்கள்‌ என்போர்‌ முதலாம்‌ கட்ட தடுப்பூசியை பெற்றுக்‌ கொண்டுள்‌ளனர்‌.

இரண்டாம்‌ கட்ட ஊசிகள்‌ வழங்கப்‌படாததையடுத்து அவர்களுக்கும்‌ தொற்று பரவும்‌ ஆபத்து உள்ளது. இது குறித்து அரசாங்கம்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. அலட்சியமாக இருக்கக்‌ கூடாது என்றார்‌.

(மடுல்கலை நிருபர்‌) – வீரகேசரி 5-9-21