சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் விற்பனை செய்வதற்கான சீனி சந்தையில் இல்லை என மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சீனி இறக்குமதியாளர்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீனி வழங்கப்படுவதனால் விற்பனை நடவடிக்கைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் போதுமான அளவு அரிசியும் கிடைப்பதில்லை என மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

-தமிழன்.lk-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price