மர்மமான முறையில் உயிரிழக்கும் வளர்ப்பு நாய்கள்- ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பருந்துகள் மற்றும் வளர்ப்பு நாய்கள் திடீரென உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி மக்களிடேயே அச்ச நிலை உருவாகியுள்ளதாக அறியமுடிகிறது.

யோதவெவ, சந்தகிரிகம ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 25 நாய்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். -தமிழன்.lk-