கொரோனா தொற்றைக்‌ கட்டுப்படுத்துவது தொடர்பில்‌ முஸ்லிம்‌ அமைப்புகளது அன்பான வேண்டுகோள்‌!

ஆட்கொல்லி கொரோனா வைரஸ்‌ உலகில்‌ சுமார்‌ 200 க்கும்‌ அதிகமான நாடுகளில்‌ பரவியுள்ளது இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள்‌ பரிதாபகரமான முறையில்‌ இறந்திருக்கிறார்கள்‌. நமது நாட்டிலும்‌ இந்நோயால்‌ பாதிக்கப்படுபவர்களது தொகை நாளுக்கு நாள்‌ அதிகரித்த வண்ணமுள்ளது. எனவே, இதனைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ தான்‌ இலங்கை அரசாங்கம்‌ ஊரடங்குச்‌ சட்டத்தை அமுலாக்கி வருகிறது. தனிமைப்படுத்தல்‌ முகாம்களை அமைத்திருப்பதுடன்‌ நோய்‌ கண்டவர்களுக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும்‌ செய்து வருகிறது.

நோய்‌ பரவுவதைத்‌ தடுக்கும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜும்‌ஆ மற்றும்‌ ஐங்கால தொழுகைகள்‌ பள்ளிவாயல்களில்‌ இடம்பெறக்‌ கூடாது என்று ஏற்கெனவே முஸ்லிம்‌ சமூக அமைப்புகள்‌ ஒருமித்த கருத்தில்‌ வேண்டுகோள்‌ விடுத்திருக்கின்றன.

அத்துடன்‌ இந்த கொடிய நோய்‌ பரவியிருக்கலாம்‌ என சந்தேகிக்கப்படும்‌ சில பிரதேசங்கள்‌ முற்றுமுழுதாக (Lock-Down) முடக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பிரதான காரணம்‌, அப்பகுதிகளைச்‌ சேர்ந்த சிலர்‌ வெளிநாடு சென்றிருந்த போது நோய்த்‌ தொற்றுக்குள்ளாகியிருந்து பின்னர்‌ ஊர்களில்‌ வந்து மக்களோடு மக்களாக கலந்திருக்கிறார்கள்‌ என்பதாகும்‌. எனவே, அவர்களது குடும்பத்தவர்களுக்கும்‌ அந்நோய்‌ தொற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

அவர்கள்‌ பழகியவர்களுக்கும்‌ அந்த ஊர்களில்‌ உள்ளவர்களுக்கும்‌ அது பரவியிருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என நம்பப்படுவதால்‌ அந்த ஊர்களை பிற ஊர்களிலிருந்து அரசு பிரித்து வைத்திருப்பதுடன்‌, கடுமையான சுகாதார மற்றும்‌ பாதுகாப்பு ஏற்பாடுகளும்‌ செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும்‌ அருகிலுள்ள வீட்டாரோடு கூட தொடர்பு வைக்கக்‌ கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைவரது நலன்களைக்‌ கருத்திற்‌ கொண்டு நாம்‌ பின்வரும்‌ நடை முறைகளைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என்று அரசும்‌ முஸ்லிம்‌ அமைப்புகளும்‌ எதிர்பார்க்கின்றன:-

Read:  மீண்டும் ரணில் !!

1. ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கு ஏற்ப எந்தவொரு பள்ளிவாயலிலோ அல்லது பொது இடங்களிலோ ஐங்கால மற்றும்‌ ஜும்‌ஆ தொழுகைகள்‌ இடம்பெறுவது கண்டிப்பாகத்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌.

2. இந்த சட்டத்தை எவராவ. மீறுவது பற்றிய தகவல்கள்‌ கிடைத்தால்‌ அருகிலுள்ள பொலிஸ்‌ நிலையத்துக்கு அதுபற்றி அறிவிக்க வேண்டும்‌.

3. எவராவது மார்ச்‌ 1௦ஆம்‌ திகதிக்குப்‌ பின்னர்‌ வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தால்‌, அவர்‌ எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அருகிலுள்ள போலீஸ்‌ நிலையத்துக்கு அது பற்றி அறிவிக்க வேண்டும்‌.

4. யாராவது ஒருவர்‌ வெளிநாடு சென்று வந்த பின்னர்‌ அதுபற்றி அவர்‌ போலீசுக்கு அறிவிக்காமல்‌ வீட்டில்‌ மறைந்திருந்தால்‌ அது பற்றி தெரிந்தவர்கள்‌ போலீசுக்கு தகவல்‌ கொடுக்க வேண்டும்‌.

5 வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நபருடன்‌ எவராவது தொடர்பு கொண்டிருந்தால்‌ அல்லது பழகியிருந்தால்‌ அவர்‌ தன்னைத்‌ தானே தனிமைப்படுத்தி ( Quarantine ) மற்றவர்களது தொடர்பில்லாமல்‌ இருக்கவேண்டும்‌. அது அவரது விட்டிலாகவும்‌ இருக்கலாம்‌. அவர்‌ விட்டில்‌ இருக்கின்ற பொழுது வேறு எவருடனும்‌ எந்த தொடர்பையும்‌ வைத்திருக்கக்கூடாது. தனக்கென்று ஓர்‌ அறையை அவர்‌ பிரத்தியேகமாக தில அதற்குள்‌ இருக்கவேண்டும்‌. அப்படியான வசதி அந்த விட்டில்‌ இல்லாதிருந்தால்‌ வெ டமொன்றில்‌ அதற்கான வசதியை செய்து தரும்படி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்‌ அங்கு சென்று தன்னை தனிமைப்படூத்தி வாழ வேண்டும்‌.

6. எவருக்காவது கோவிட்‌ 3 தொற்றின்‌ அடையாளங்கள்‌ இருந்தால்‌ அவர்‌ தனிப்பட்ட ஒரு வைத்தியரிடமோ தனியார்‌ சிகிச்சை நிலையங்களுக்கோ போகாமல்‌ அரச வைத்தியசாலைகளுக்கு அல்லது சிகிச்சை நிலையங்களுக்கு மட்டுமே போக வேண்டும்‌. அவ்வாறு போக முன்னர்‌ அது பற்றி
அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்‌.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

7. ஊரடங்குச்‌ சட்டம்‌ அமுலில்‌ இருக்கும்‌ போதும்‌ தனிப்பட்ட தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உள்ளாகும்‌ போதும்‌ அரசு விதித்த சட்டங்களுக்கு அனைவரும்‌ முழுமையாகக்‌ கட்டுப்பட வேண்டும்‌.

மேற்கூறப்பட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாதவர்களுக்கு எதிராக கடும்‌ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‌. நாட்டின்‌ சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது நாட்டுப்‌ பற்றின்‌ அடையாளமாக இருப்பதுடன்‌ அது ஒரு மார்க்கக்‌ கடமையுமாகும்‌

தனக்கு ஆட்கொல்லி நோய் வந்திருந்து அது பிறருக்கு பரவுவதற்கு காரணமாக இருப்பாராயின்‌ அல்லது. நாட்டின் சுகாதார விதிகளுக்கு கட்டுப்படாது தான்தோன்றித்தனமாக பொறுப்பில்லாமல்‌ நடப்பாராயின்‌ அது பிறரைக்‌ கொலை செய்வதற்குச்‌ சமமாகும்‌. தன்னை அழித்துக்‌ கொண்டு பிறரையும்‌ அழிப்பதற்கு நிகரானதாகும்‌.

அல்குர்‌ஆனில்‌ அல்லாஹ்‌ யார்‌ ஓர்‌ உயிரைக்‌ கொலை செய்கிறாரோ அவர்‌ மனிதர்கள்‌ அனைவரையும்‌ கொலை செய்ததற்கு சமமாகும்‌. யார்‌ ஓர்‌ உயிரை வாழவைக்கிறாரோ அவர்‌ மனிதர்கள்‌ அனைவரையும்‌ வாழவைத்ததற்கு சமமாகும்‌” (சூரா அல்மாயிதா.32) என்று கூறுகிறான்‌.

மேலும்‌ ஊரடங்‌ சட்டத்தின்‌ போது வீட்டில்‌ நேரத்தை கழிப்பதற்கான சந்தர்ப்பம்‌ கிடைத்திருக்கிறது. இதன்‌ போது சுத்தம்‌, சுகாதாரம்‌ தொடர்பாகவும்‌. குடும்ப வாழ்வு, வீடு சூழல்‌, பிள்ளை வளர்ப்பு தொடர்பாகவு இஸ்லாம்‌ காட்டி தந்திருக்கின்ற வழிகாட்டல்களைப்‌ பின்பற்றுவதுடன்‌ அல்லாஹ்வின்‌ நாட்டமின்றி உலகில் எதுவும்‌ நடக்கமாட்டாது என முஸ்லிம்களாகிய நாம்‌ உறுதியாக நம்பூவதால்‌ எப்போதும்‌ அந்த இரட்சகனுடனான தொடர்பை வலுப்படுத்திக்‌ கொண்டு இபாத்துக்களில்‌ ஈடுபட்டு பொறுமையோடு தவக்குலோடும்‌ இருப்போமாக

முஸ்லிம்‌ சமூகம்‌ தனது பொறுப்பை நிறைவேற்றவும்‌ தொற்று நோய்‌ வராமல்‌ அனைவரையும்‌ காப்பாற்றவும்‌ நாட்டின்‌ சட்டதிட்டங்களுக்குக்கும்‌ முஸ்லி சமூக‌ அமைப்புக்களது வழிகாட்டல்களுக்கும்‌ கட்டுப்பட்டு நடக்கும்‌ படி அனைத்து முஸ்லிம்களையும்‌.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

முஸ்லிம்‌ அமைப்புக்கள்‌ அன்பாக வேண்டிக்‌ கொள்வதுடன்‌ இந்த அறிவுறுத்தல்கள் சமூகத்தில் உள்ள சகலரையும்‌ சென்றடைய எல்லா ஜமாசத்தக்களும்‌ பள்ளி நிருவாக சபைகளும்‌ சமூக சேவை அமைப்புகளும்‌ தம்மாலான முயற்சிகளைச்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌ எதிர்பார்க்கின்றன.

இந்த கொடிய நோயிலிருந்து அனைவரையும்‌ அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக!

 1. அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா. (ACJU)
 2. சூபித்‌ தரீக்காக்களின்‌ உயர்‌ பீடம்‌ SCOST-SL
 3. ஸ்ரீ லங்கா முஸ்லிம்‌ கவுண்சில்‌ MCSL
 4. தேசிய ஷூரா சபை. (NSC
 5. அகில இலங்கை முஸ்லிம்‌ வாலிபர்‌ சங்கப்‌ பேரவை. YMMA
 6. கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள்‌ சம்மேளனம்‌ (CDMF
 7. ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி SLJI
 8. ஜமாஅதுஸ்‌ ஸலாமா SALAMAH
 9. இலங்கை அறபுக்‌ கல்லூரிகள்‌ ஒன்றியம்‌ (FAC-ITHTHIHAD
 10. ஸம்‌ ஸம்‌ பவுண்டேஷன்‌. ZAM ZAM FOUNDATION
 11. அகில இலங்கை தவ்ஹீத்‌ ஜமாஅத்‌ (ACTJ
 12. அகில இலங்கை முஸ்லிம்‌ லீக்‌ வாலிப முன்னணிகளின்‌ சம்மேளனம்‌. ACMLYF
 13. ஸ்ரீ லங்கா மலாயர்‌ சம்மேளனம்‌. COSLAM
 14. இலங்கை மேமன்‌ சங்கம்‌ (MASL
 15. அஞ்சுமன்‌ இ.சைபி ஸ்ரீலங்கா) ட்ரஸ்ட்‌ இலங்கையின்‌ தாவூதி போஹ்ரா முஸ்லிம்‌சமூகத்தின்‌ விவகாரங்களை நிர்வகிப்பதற்கான அமைப்பு. DBMC-SL
 16. ஸ்ரீ லங்கா ஊடக அமைப்பு
 17. மர்கஸ்‌ இஸ்லாமிக்‌ நிலையம்

03-04-2020