கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தல் நிலையில் இலங்கை!

விழிப்பாக இருத்தலே அவசியம் –

கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே  முடிவு செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

உலகில் இடம்பெற்ற போர்களை விட இந்த கொரோனா வைரஸினால் உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஒரு நாடு என்ற ரீதியில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆகவே இந்த விடயத்தில் வெளிப்புற தாக்கங்களை வைத்து முடிவுகளை எட்டாமல் அறிவியல் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.- தினகரன்

Previous article(வீடியோ) தலிபான்களால் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெறும்! ஞானசார தேரர் தெரிவிப்பு
Next articleஇன்று முதல் அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்