ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை தனியார் பஸ் ஊழியர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், தனியார் பஸ் உரிமையாளர்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும், இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கும் வேதனம் கிடைக்கின்றது.

ஆனால், தனியார் பஸ் ஊழியர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், ஆசிரியர்கள் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அந்தக் கொடுப்பனவை தயவுசெய்து பஸ் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் துறையை மீட்பதற்கு ஆகக்குறைந்தது 5 இலட்சம் ரூபா இழப்பீடாவது வழங்கப்பட வேண்டும்.

காப்புறுதி முறைமையின் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தின் மூலமாகவோ இந்த இழப்பீட்டை வழங்குமாறு கெமுனு விஜேரத்ன கோரியுள்ளார். -தமிழன்.lk-

Previous articleதடுப்பூசியையும், அறிவுறுத்தல்களையும் அலட்சியம் செய்வது ஆபத்தையே தரும்!
Next articleபொறுப்புடன் செயற்படாவிடின் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் – எச்சரிக்கிறார் நிமல் லான்சா