இஸ்லாமிய ஆப்கான் அமீரகம் – இனி சுதந்திர நாடு

அமெரிக்க இராணுவம்‌ ஆப்கானிஸ்தானில்‌ இருந்து வெளியேறியதை அடுத்து நாடு முழுவதும்‌ தலிபான்களின்‌ கைகளுக்குள்‌ வந்துள்‌ளது. ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய ஆப்கன்‌ அமீரகம்‌ சுதந்திர நாடு என தலிபான்கள்‌ தெரிவித்துள்ளனர்‌.

ஆப்கானிஸ்தானில்‌ தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர்‌ முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின்‌ கடைசி விமானம்‌ காபூலில்‌ உள்ள ஹமீது கர்சாய்‌ விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டு சென்றது.

கடந்த 2001ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ 11ஆம்‌ திகதி அமெரிக்காவின்‌ நியூயோர்க்‌ நகரில்‌ இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள்‌ தகர்த்தனர்‌. அந்தத்‌ தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல்‌ கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில்‌ அடைக்கலம்‌ ‌ கொடுத்திருந்த தலிபான்கள்‌ மீது போர்‌ தொடுத்து, அவர்களின்‌ ஆட்சியை அமெரிக்க படைகள்‌ அகற்‌றின. ஜனநாயக ரீதியிலான ஜனாதிபதி தேர்தல்‌ நடத்தி , புதிய அரசியலமைப்புச்‌ சட்டம்‌ நிறுவப்பட்டன.

ஆனால்‌ தோல்வி கண்ட தாலிபன்கள்‌ மெல்ல தங்களை பலப்படுத்திக்‌ கொண்டனர்‌. பல ஆண்டுகள்‌ ‌ யுத்தம்‌ நீண்டது. தலிபான்கள்‌ தங்கள்‌ எதிர்ப்பை வலுப்படுத்தினர்‌. இருத‌ரப்பிலும்‌ நடந்த போரில்‌ கடந்த 20 ஆண்டுகளில்‌ ஆயிரக்கணக்கானோர்‌ உயிரிழந்தனர்‌, அப்பாவி மக்கள்‌ லட்சக்கணக்கில்‌ கொல்லப்பட்டனர்‌. இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில்‌ அமெரிக்க புதிய ஜாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன்‌, ஆகஸ்ட்‌ 31ஆம்‌ திகதிக்குள்‌ அமெரிக்கப்‌ படைகள்‌ முழுமையாக ஆப்கானிலிருந்து வெளியேறும்‌ என்று அறிவித்தார்‌.

இதைத்‌ தொடர்ந்து அமெரிக்க படைகள்‌ வெளியேறத்‌ தொடங்கியதையடுத்து, தலிபான்கள்‌, பல்வேறு மாகாணங்‌களைக்‌ கைப்பற்றி, முழுமையாக தங்கள்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டு வந்துள்ளனர்‌. கடந்த 15ஆம்‌ திகதி ஆப்கான்‌ ஐனாதிபதி அஷ்ரப்‌ கனி நாட்டை விட்டு வெளியேறியதும்‌ தலிபான்கள்‌ கட்டுப்பாட்டில்‌ ஆப்கான்‌ முழுமையாக வந்தது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இந்நிலையில்‌ ஆப்கானிலிருந்து அமெரிக்கப்‌ படைகள்‌ ஆகஸ்ட்‌ 31ஆம்‌ திகதியுடன்‌ வெளியேற வேண்டும்‌ என்பதால்‌, அந்தக்‌ காலக்கெடு முடிவதற்கு முன்‌, அமெரிக்க இராணுவத்தின்‌ கடைசி விமானம்‌, காபூல்‌ ஹமீது கர்சாய்‌ விமானநிலையத்திலிருந்து நேற்று வெளியேறியது.

இதுகுறித்து அமெரிக்க மத்தியப்படையின்‌ கொமாண்டர்‌ ஜெனரல்‌ பிராங்‌ மெக்கென்ஸி நிருபர்களிடம்‌ கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்‌ படைகள்‌ முழுமையாக வெளியேறிவிட்டன என்பதை இந்த நேரத்தில்‌ அறிவிக்கிறேன்‌. இதன்‌ மூலம்‌ அமெரிக்க மக்கள்‌, ஆப்கான்‌ மக்கள்‌, பிறநாட்டவர்‌ என அனைவரையும்‌ வெளியேற்றும்‌ திட்டமும்‌ நிறைவடைந்‌தது, 20 ஆண்டுகாலப்‌ போரும்‌ முடிந்தது. அமெரிக்க அரசைச்‌ சேர்ந்த ஒவ்வொருவரும்‌ ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறி விட்டனர்‌.

கடைசியாகப்‌ புறப்பட்ட இது சாதாரணப்‌ போர்‌ அல்ல, இந்த போரில்‌ 2,461 அமெரிக்க இராணுவ வீரர்கள்‌ உயிரிழந்துள்ளனர்‌. 20ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட வீரர்கள்‌ காயமடைந்‌தனர்‌. கடந்த வாரம்‌ ஐ.எஸ்‌. தீவிரவாதிகள்‌ தாக்குதலில்‌ 13 அமெரிக்க வீரர்கள்‌ கொல்லப்‌பட்டனர்‌. அவர்களின்‌ தியாகத்தை நினைவு கூர்கிறோம்‌.” எனத்‌ தெரிவித்துள்ளனர்‌.

இந்நிலையில்‌, காபூல்‌ விமான நிலையத்தில்‌ நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச்‌ சொந்தமான விமானங்கள்‌, ஆயுதம்‌ தாங்கிய வாகனங்கள்‌, ஏவுகணை அழிப்பு அமைப்புகள்‌ என மொத்தம்‌ 73 வாகனங்களை அமெரிக்கப்‌ படைகள்‌ இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச்‌ செய்துள்ளனர்‌.

இது குறித்து அமெரிக்க மத்திய படைகளின்‌ தலைவர்‌ ஜெனரல்‌ கென்னத்‌ மெக்‌கன்சி கூறுகையில்‌, “ஹமீது கர்சாய்‌ விமான நிலையத்தில்‌ விமானங்கள்‌, போர்‌ வாகனங்கள்‌ உட்பட 73 வாகனங்களை செயலிழக்கச்‌ செய்துள்ளோம்‌. அந்த விமானங்கள்‌ இனி பறக்கவே செய்யாது. அதேபோல்‌ அங்குள்ள போர்‌ தளவாடங்களை வேறு எவராலும்‌ இனி பயன்படுத்தவே முடியாது. ஒவ்வொரு வாகனத்தின்‌ மதிப்பும்‌ 1 மில்லியன்‌ டொலர்‌. இவற்றில்‌ 27 ஹம்வீ ஏவுகணை இடைமமறிப்பு வாகங்‌களும்‌ அடங்கும்‌. அதுமட்டுமல்லாமல்‌ 444 ஷூ எனப்‌படும்‌ ரொக்கெட்டுகள்‌, பீரங்கிக்‌ குண்டுகளை இடைமமறிக்கும்‌ சக்தி கொண்ட வாகனத்தையும்‌ அங்கேயே விட்டுவந்துள்ளது. ஆனால்‌, சிரேம்‌ சிஸ்டம்‌ செயலிழக்கச்‌ செய்‌யப்பட்டுவிட்டது. நாங்கள்‌ வெளியேறும்‌ கடைசி நிமிடம்‌ வரை அந்த அமைப்பை இயங்கும்‌ நிலையில்‌ வைத்திருந்தோம்‌” என்றார்‌.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இந்த வாகனத்தைக்‌ கொண்டுதான்‌ அமெரிக்கா ISIS கோரோசன்‌ பயங்கரவாதிகள்‌ அனுப்பிய ரொக்கெட்டை அழித்‌தனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப்‌ படைகள்‌ வெளியேறியதை தலிபான்கள்‌ வரவேற்‌றுள்ளனர்‌. தலிபான்கள்‌ பெர்சிய மொழியில்‌ டுவிட்டரில்‌ பதிவிட்ட செய்தியில்‌ “அனைத்து முஜாகிதீன்கள்‌, வீரர்கள்‌, நம்முடைய தேச மக்களுக்கு வாழ்த்துகள்‌. இன்று, அனைத்து வெளிநாட்டவர்களும்‌ நம்‌ தேசத்‌தைவிட்டு, தியாக பூமியைவிட்டு வெளியேறிவிட்டனர்‌.

ஆப்கானில்‌ இருந்து அமெரிக்கப்‌ படைகள்‌ வெளியேறிவிட்டன. இதனைக்‌ கொண் டாடும்‌ விதத்தில்‌ தலிபான்கள்‌ காபூல்‌ விமானநிலையத்துக்குச்‌ சென்றனர்‌. விமான நிலையத்தின்‌ ஓடுதளத்தில்‌ துப்பாக்கியுடன்‌ குவிந்த தலிபான்கள்‌ வானத்தை நோக்கிச்‌ சுட்டுக்‌ கொண்டாடினர்‌. பின்னர்‌ பேசிய தலிபான்‌ செய்தித்‌ தொடர்‌பாளர்‌ ஜபிபுல்லா முஜாகீத்‌, “இஸ்லாமிய ஆப்கான்‌ அமீரகம்‌ இனி சுதந்திரமான நாடு. இதில்‌ நாம்‌ எவ்வித சந்தேகமும்‌ கொள்ள வேண்டாம்‌. அமெரிக்கா தோற்றுவிட்டது. இந்‌ நிலையில்‌, எங்கள்‌ நாட்டின்‌ சார்பாக நாங்கள்‌ உலகின்‌ பிற நாடுகளுடன்‌ நல்லுறவை பேண விரும்புகிறோம்‌. ஆப்கான்‌ மக்களின்‌ சுதந்திரம்‌ போற்றப்படும்‌. இஸ்லாமிய சட்டங்‌களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறும்‌. நமது வெற்றி அந்நியப்‌ படைகளுக்கு ஒரு பாடம்‌. தலிபான்‌ படைகள்‌ கண்ணியமாக நடந்து கொள்ளும்‌” என்று தெரிவித்தார்‌.

முன்னதாக, ஆப்கான்‌ நேரப்படி நள்ளிரவுக்கு முன்னதாகவே அமெரிக்கப்‌ படைகள்‌ முழுமையாக ஆப்கானில்‌ இருந்து வெளியேறிவிட்டதாக அமெரிக்க மத்திய கொமாண்ட்‌ தலைவர்‌ பிராங்‌ மெக்கன்சி தெரிவித்தார்‌. நாங்கள்‌ அங்கிருந்து வெளியேற விருப்பப்‌பட்ட அனைவரையும்‌ வெளியே அழைத்து வர முடியவில்லை. ஆனால்‌, நாங்கள்‌ அங்கே இருந்திருந்தாலும்‌ கூட விரும்பியவர்களை வெளியே அழைத்துவர முடிந்திருக்காது என்று கூறினார்‌.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

காபூல்‌ சர்வதேச விமான நிலையத்தை தலிபான்கள்‌ தங்களின்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டுவந்துவிட்ட நிலையில்‌, அனைவரின்‌ பார்வையும்‌ விமான நிலையம்‌ இனி இயங்குமா என்ற கோணத்தில்‌ திரும்பியுள்‌ ளது.

ஆப்கானில்‌ இன்னும்‌ சில வெளிநாட்‌டவர்‌ சிக்கியுள்ளனர்‌. குறிப்பாக குறைந்தது 100 பேர்‌ கொண்ட அமெரிக்கர்களும்‌ உள்‌ளனர்‌. அவர்களை வெளியேற்ற முடியுமா என்ற சந்தேகம்‌ எழுந்துள்ளது. இந்நிலையில்‌ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்‌ குழுவானது தீர்மானம்‌ ஒன்றை நிறைவேற்றியது. அந்தத்‌ தீர்மானத்தில்‌ வரும்‌ நாட்களில்‌ ஆப்கனில்‌ இருந்து மக்கள்‌ வெளியேற சுதந்திரம்‌ அளிக்க வேண்டும்‌ என்று தலிபான்களுக்குக்‌ கோரப்பட்டது. அதுபோல்‌ ஐ.நா. மற்றும்‌ பிற தொண்டு அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான்‌ அனுமதி அளிக்க வேண்டும்‌ என்றும்‌ கோரப்பட்டுள்ளது.இனி காபூல்‌ விமான நிலையத்தை இயக்குவது யார்‌ என்ற பேச்சுவார்த்தைகள்‌ நடந்து வருகின்றன.

துருக்கி அரசு விமான போக்குவரத்து சேவையைக்‌ கையாண்டால்‌ தாங்கள்‌ பாதுகாப்பு விடயங்களைக்‌ கண்காணித்துக்‌ கொள்வதாக தலிபான்கள்‌ தெரிவித்துள்ளனர்‌. ஆனால்‌ துருக்கி இதுவரை இதற்கு ஒப்புதல்‌ தெரிவிக்கவில்லை.

தற்போது தலிபான்கள்‌ வசம்‌ ஆப்கான்‌ முழுமையாக வந்துள்ள நிலையில்‌ சீனா, பாகிஸ்தான்‌ உள்ளிட்ட பல நாடுகள்‌ அதனுடன்‌ நட்புறவு கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளன. இந்திய தூதுவர்‌ கூட நேற்று பேச்சுவார்த்தையில்‌ ஈடுபட்டதாக செய்திகள்‌ வெளியாகின. பார்ப்போம்‌ சர்வதேசம்‌ தலிபான்களை ஏற்குமா என்று.

குமார்‌ சுகுணா -வீரகேசரி 1-9-21