டொலர் விற்பனை 226 ரூபாவாக உயர்வு- சில இடங்களில் 260 ரூபா?

நாட்டின் முன்னணி வணிக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் விற்பனை விலை அதிகரிப்பை காண்பித்துள்ளது.

அதன்படி, டொலரொன்றின் விற்பனை விலை 226 ரூபாவாக பதிவாயிருந்தது.

எனினும் அரச வங்கிகளில் டொலர் விற்பனை விலை 204 ரூபாவாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒருசில வெளிநாட்டு நாணய மாற்று முகவர் நிலையங்களில் ஒரு டொலரின் விலை 260 ரூபா வரை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -தமிழன்.lk-

Previous articleமுடக்கல் நிலையை மேலும் இரு வாரம் நீடிக்க வேண்டும் – சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
Next articleஇஸ்லாமிய ஆப்கான் அமீரகம் – இனி சுதந்திர நாடு