சிறுவர்களுக்கு ஆபத்தாகும் ஒன்லைன்

டிஜிட்டல்‌ கல்வி முறையில்‌ மாணவர்களால்‌ தடைப்படாமல்‌ கல்வியைத்‌ தொடர முடிந்தது என்றாலும்கூட, இன்னொருபுறம்‌ இணையவழியில்‌ அவர்களுக்குத்‌ தேவையில்லாத பலவும்‌ ஆக்கிரமிக்கத்‌ தொடங்கின. அவற்றில்‌ முக்கியமானது ‘ஒன்லைன்‌ கேம்ஸ்‌’ என்று பரவலாக அறியப்படும்‌ இணையவழி விளையாட்டுகள்‌. சிறுவர்கள்‌ மத்தியிலும்‌, இளைஞர்கள்‌ மத்தியிலும்‌ அதிகரித்துவரும்‌ ஆபத்தாக மாறியிருக்கிறது இணையவழி விளையாட்டுகளின்‌ மீதான அவர்களது போதை சில விளையாட்டுகளால்‌ தற்‌கொலைகள்‌ நேர்ந்ததைத்‌ தொடர்ந்து, அவை தடை செய்யப்பட்டன. ஆனால்‌, அபாயகரமான பல புதிய இணைய விளையாட்டுகள்‌ இப்‌போது நுழைந்திருக்கின்றன.

12 வயது நிரம்பியவர்கள்‌ பெற்‌றோரின்‌ அனுமதியுடன்தான்‌ இணைய விளையாட்டுகளில்‌ பங்குபெற வேண்டுமென்கிற கண்‌ துடைப்பு அறிவிப்புகள்‌ செய்யப்பட்டாலும்‌ கூட, அந்த விளையாட்டுகள்‌ நான்கு, ஐந்தாம்‌ வகுப்புகளில்‌ படிக்கும்‌ மாணவர்களால்கூட இரவு பகல்‌ பாராமல்‌ விளையாடப்படுகின்றன என்பதுதான்‌ நிஜ நிலைமை. சில அசம்பாவிதங்கள்‌ ஏற்பட்டதைத்‌ தொடர்ந்துதான்‌ இந்தப்‌ பிரச்சினை பொது வெளியில்‌ கவனம்‌ ஈர்த்திருக்‌கிறது.

சில குழந்தைகள்‌ இந்த இணையவழி விளையாட்டுகளின்‌ மீது பைத்தியமாக மாறியிருக்கின்றனர்‌. அடிதடி, கைகலப்பு, துப்பாக்கியால்‌ ௬டுதல்‌ உள்ளிட்ட வன்முறை அடிப்‌படையில்‌ உருவாக்கப்படும்‌ பல இணைய விளையாட்டுகள்‌ நகரம்‌, கிராமம்‌ என்கிற வேறுபாடில்லாமல்‌ அனைத்துத்‌ தரப்பு குழந்தைகள்‌ மத்தியிலும்‌ பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றிருக்கின்றன.

பல குடும்பங்களில்‌ பெற்றோருக்கும்‌ குழந்தைகளுக்கும்‌ இடையே கடுமையான வாக்குவாதத்துக்கும்‌, பிரச்சினைக்கும்‌ இந்த விளையாட்‌டுகள்‌ காரணமாக இருப்பதாகவும்‌ சொல்லப்படுகின்றது.

நாம்‌ எண்மவழி வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டிருக்கும்‌ வேளையில்‌ ஸ்மாட்போன்‌, கணினி, மடிக்கணினி போன்றவற்றில்‌ அடுத்த தலைமுறையினர்‌ ஈர்ப்பும்‌, ஈடுபாடும்‌ காட்டுவதை வரவேற்க வேண்டும்‌.

தங்களது அறிவை வளர்த்துக்‌ கொள்வதற்கும்‌, கருத்துப்‌ பரிமாற்றத்‌துக்கும்‌, ஆக்கபூர்வ பொழுதுபோக்‌குக்கும்‌ இணையம்‌ பயன்படுத்தப்படுவது வரவேற்புக்குரியது. ஆனால்‌ சிறுவர்களையும்‌, இளைஞர்களையும்‌ உளவியல்‌ ரீதியாகவும்‌, உடலியல்‌ ரீதியாகவும்‌ தடம்புரளச்‌ செய்யும்‌ இணையவழி விளையாட்‌டுகள்‌ வரவேற்புக்குரியவை அல்ல. ‘சைபர்‌ சுப்பர்‌ ஹைவே’ என்று அழைக்கப்படும்‌ இணைய நெடுஞ்‌சாலையில்‌ காணப்படும்‌ ஆபத்துகள்‌ குறித்து சிறுவர்களுக்கும்‌, இளைஞர்களுக்கும்‌ புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு சாலை விதிகளைக்‌ கற்றுக்‌ கொடுப்பதுபோல இணையவழியில்‌ பயணிப்பதற்கான விதிமுறைகளையும்‌ உருவாக்கி புரிதலை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அதிகம்‌ கல்வி கற்காத பெற்றோர்‌, தங்களது குழந்தைகளின்‌ இணைய பயன்பாட்டை வியந்து பார்க்கிறார்‌களே தவிர, அவர்கள்‌ செல்லும்‌ பாதை சரியானதுதானா என்பதைத்‌ தெரிந்துகொள்வதில்லை. அதனால்‌, பல குழந்தைகள்‌ பேராபத்தில்‌ சிக்கிவிடுவதை நாம்‌ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. இணையவழி விளையாட்டுகளையும்‌, அவற்றின்‌ வழிமுறைகளையும்‌ கட்டுப்படுத்தவும்‌, நெறி முறைப்படுத்தவும்‌ முறையான விதிமுறைகள்‌ இல்லை என்பதால்‌ விபரீதங்களுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. சிறுவர்களும்‌, இளைஞர்களும்‌ மட்டுமல்ல, அனைத்துத்‌ தரப்பினரும்‌ இணையவழி விளையாட்டுகளிலும்‌ சூதாட்டத்திலும்‌ ஈடுபடும்‌ நிலைமை காணப்படுகிறது.

டிஜிட்டல்‌ கல்வி முறையின்‌ நன்‌மைகள்‌ என்று எடுத்துக்கொண்டால்‌, யார்‌ வேண்டுமானாலும்‌, எப்பொழுது வேண்டுமானாலும்‌, எங்கு வேண்‌டுமானாலும்‌ இருந்து இந்த கல்‌வியைப்‌ பயில இயலும்‌. தான்‌ வேறு துறையை சார்ந்தவராக இருப்பினும்‌, தான்‌ விரும்பும்‌ மற்றொரு துறையின்‌ படிப்பையும்‌ படிக்க இயலும்‌.

ஆனால்‌, பள்ளிக்கு செல்லும்‌ குழந்தைகளுக்கு இது எப்படி இருக்கிறது?. அவர்களுக்கு பயிற்றுவிக்கும்‌ ஆசிரியர்களுக்கு இது எப்படி இருக்‌கிறது?. இதை பெற்றோர்கள்‌ எப்படி பார்க்கிறார்கள்‌

வித்தியாசமான அனுபவம்‌

இதுவரை பள்ளிக்கு சென்று மட்டுமே படித்துக்‌ கொண்டிருந்த பிள்ளைகள்‌, ஆசிரியர்‌ முன்‌ தன்‌னுடைய கவனத்தை வைத்திருந்த பிள்ளைகள்‌, இன்று நம்‌ கணினியின்‌ திரை முன்‌ தன்னுடைய கவனத்தை வைக்க வேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. மேலும்‌, இவர்களுக்கு பள்ளி செல்லும்‌ காலங்களில்‌ உடல்‌ ரீதியாகவும்‌, மன ரீதியாகவும்‌ இதற்கு தயாராகிறார்கள்‌. ஆனால்‌, இந்த ‘ஒன்‌லைன்‌ கல்வியில்‌ மேற்கூறியவற்‌றுக்கு எதற்கும்‌ தேவை கிடையாது. உனக்கு ஒரு கணினி மட்டுமேதேவை. அதற்கு முன்‌ இருக்க வேண்‌டியது அவசியமே தவிர வேறு எதுவும்‌ அவசியமில்லை.

இந்த சூழ்நிலையில்‌ அவர்களுக்கு ஒரு முன்தயாரிப்பு, அதாவது பள்ளி செல்லும்‌ தயாரிப்புகள்‌ எதுவும்‌ கிடையாது. பள்ளிச்‌ சூழலில்‌ தனக்கு அருகாமையில்‌ தன்னுடைய தோழனோ, தோழியோ இருப்பார்கள்‌.ஆனால்‌, எதுவுமே இல்லாமல்‌ வீட்டில்‌ வித்தியாசமான சூழ்நிலையில்‌, அம்மா, அப்பா அங்கே பேசிக்கொண்டிருப்பார்கள்‌. சகோதரனோ, சகோதரியோ டி.வி. பார்த்துக்‌ கொண்டிருப்பார்கள்‌. தாத்தா, பாட்டி பேசிக்கொண்டிருப்பார்கள்‌. இந்த சூழ்நிலையில்தான்‌ படிப்பில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌. இந்த சூழலில்‌ ‘ஒன்லைன்‌’ மூலம்‌ கல்வி கற்பது, பிள்ளைகளுக்கு சற்று கடினமாக இருக்கும்‌. மேலும்‌ கவன சிதறல்‌ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பள்ளிக்‌ கூடத்தில்‌ உட்கார்ந்து இருக்கும்பொழுது, பக்கத்தில்‌ உட்‌கார்ந்திருக்கும்‌ நண்பரிடம்‌ தன்னுடைய சந்தேகங்களை கேட்க வாய்ப்‌பிருக்கிறது. ஆனால்‌, இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இது பிள்ளைகளின்‌ பிரச்சினை என்றால்‌, ஆசிரியர்களின்‌ பிரச்சினை என்ன?

பள்ளிக்கு செல்லும்‌ ஆசிரியர்கள்‌ அந்த எட்டு மணி நேரம்‌ ஒரு ஆசிரியராக மட்டுமே இருந்தார்கள்‌. ஆனால்‌, இன்றைய சூழலில்‌ ஒரு ஆசிரியை தாயாகவும்‌, மனைவியாகவும்‌, சகோதரியாகவும்‌ அல்லது தகப்பனாகவும்‌ பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்‌ இருக்கிறது. அதாவது குடும்பத்‌தையும்‌ கவனித்துக்‌ கொண்டு, அதே நேரத்தில்‌ ஆசிரியர்‌ பணியையும்‌ செய்ய வேண்டியிருக்கிறது. இரண்டாவது அவர்களுக்கும்‌ இந்த கணினி மூலம்‌ பயிற்றுவிப்பது என்பது புதிதான ஒன்று. பள்ளி வகுப்பறையில்‌ ஆசிரியை மற்ற பிள்ளைகள்‌ எல்லோரும்‌ தன்னை கவனிக்கிறார்களா? என்று நோட்டமிட முடியும்‌. ஒன்லைனில்‌ அதற்கு வாய்ப்பு கிடையாது. அப்படி வாய்ப்பிருப்பினும்‌ அந்த ஆசிரியரால்‌ ஏதும்‌ செய்ய இயலாது.

இதைத்‌ தாண்டி சில பெற்‌றோர்கள்‌ வகுப்பில்‌ பாடம்‌ நடக்கும்‌ பொழுது, தன்‌ பிள்ளைகள்‌ அதை கவனிக்கிறார்களா? என்று பார்ப்பதற்‌காக அந்த கணினியின்‌ பின்புறமோ அல்லது அருகிலோ அமர்ந்திருக்கிறார்கள்‌. இது ஆசிரியர்களுக்கும்‌ சரி, பிள்‌ளைகளுக்கும்‌ சரி, ஒரு மிகப்‌ பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனை ‘ஹெலிகொப்டர்‌ பேரன்டிங்‌’ என்று கூறுவார்கள்‌. அதாவது தன்‌ பிள்ளைகளை சகஜமாக இருக்க விடாமல்‌, எல்லா நேரமும்‌ தங்கள்‌ கண்காணிப்புக்கு கீழேயே வைத்திருப்பார்கள்‌. தங்கள்‌ பிள்ளை கல்வி கற்பது எப்படி? என்று பார்க்க வேண்டும்‌. அதற்காக ஒன்லைன்‌ கல்வி நடக்கும்‌ இடத்தில்‌ நான்‌ உட்கார்ந்து இருக்‌கிறேன்‌. அல்லது ஆசிரியர்‌ பயிற்றுவிப்பதை நானும்‌ கற்றுக்கொண்டு என்‌ குழந்தைக்கு சொல்லிக்‌ கொடுக்‌கிறேன்‌ என்று இருப்பார்கள்‌.

இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்‌ என்பதை இவர்கள்‌ உணர வேண்டும்‌. ஆசிரியர்‌ ஆகட்டும்‌, உங்கள்‌ பிள்‌ளைகள்‌ ஆகட்டும்‌, நீங்கள்‌ அங்கு இருப்பதை நிச்சயமாக ஒரு இடைஞ்‌சலாக தான்‌ பார்ப்பார்கள்‌. பெற்றோர்களும்‌ இதை புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு அந்த நேரத்தில்‌ தனிமையை கொடுத்து, பாடத்தில்‌ கவனத்தை செலுத்த உதவ வேண்டும்‌.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

ஒன்லைன்‌ கல்வி கற்கிறேன்‌ என்ற பெயரில்‌, சில பிள்ளைகள்‌ தவறாக கணினியைப்‌ பயன்படுத்துவதை பெற்றோர்‌ கண்காணித்து தடுக்க வேண்டும்‌. பெற்றோரும்‌, ஆசிரியர்களும்‌ சரியான முறையில்‌ தகவல்களை பரிமாறிக்‌ கொள்ள வேண்டும்‌. காலை, மதியம்‌, மாலையில்‌ எத்தனை மணிக்கு வகுப்பு என்று மாணவர்‌களுக்கு அவர்களுடைய பெற்‌றோர்கள்‌ மூலம்‌ ஆசிரியர்‌ தெரிவிக்க வேண்டும்‌. அந்த நேரத்தை கடந்தும்‌ கணினி முன்பு மாணவர்கள்‌ அமர்ந்து இருந்தால்‌, அவர்களை பெற்றோர்கள்‌ கண்காணிக்க வேண்டும்‌.

எப்படி ஹெலிகொப்டர்‌ பேரன்டிங்‌ தவறு என்று கூறுகிறோமோ, அதேபோல்‌ நீ என்ன வேணாலும்‌ செய்‌, நான்‌ சும்மா வேடிக்கை பார்க்கிறேன்‌ என்பதும்‌ தவறு.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள்‌ ஒன்லைனில்‌ தேர்வு நடத்துகிறார்கள்‌. இதை மாணவர்கள்‌ எவ்வளவு நோமையாக செய்யப்போகிறார்கள்‌ என்பது கேள்வி. இதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்‌.

ஒன்லைன்‌ கல்வியில்‌ இவ்வளவு குழப்பங்கள்‌ இருக்கிறதா? என்று பயப்படவேண்டாம்‌. இதில்‌ நன்மைகளும்‌ இருக்கிறது, சிறுசிறு தீமைகளும்‌ இருக்கிறது.

முதலாவதாக நாம்‌ ஒழுக்கத்துடன்‌ வாழ வேண்டும்‌ என்று பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும்‌. இரண்டாவதாக பிள்ளைகளை பெற்றோர்கள்‌ சற்று கவனமாக கண்காணிக்க வேண்டும்‌. ஆனால்‌ எல்லா நேரமும்‌ அவர்கள்‌ கண்காணிப்பில்‌ வைத்துக்‌ கொண்டு பயமுறுத்த கூடாது. ஆசிரியர்களும்‌ இந்தக்‌ கல்வியை எதன்‌ வழியாக போதித்தாலும்‌ திறம்பட போதிப்பேன்‌ என்ற எண்ணத்துடன்‌ பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்‌. (வீரகேசரி 31-8-21)