மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணையாவிடின், பொதுத்தேர்தலில் ஏற்பட்ட அதே கதிதான் ஏற்படும்

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விலைபோக சந்தர்ப்பத்தை வழங்கி விட்டு கட்சித்தலைவரும் கட்சி பிரமுகர்கர்களும் சதி செய்தார்கள் எனக்கூறுவது சிறுபிள்ளைத்தன செயற்பாடாகும் என, முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நல்லதொரு சமூகத்தின் சாட்சியாளர்களின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 03 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்காக கட்சியும், கட்சி ஆதரவாளர்களும் பாரிய முயற்சியினை மேற்கொண்டனர்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர் வெற்றி அடைவதற்காக அட்டாளைச்சேனை பிரதேச வாக்காளர்களும், அம்பாறை மாவட்ட வாக்காளர்களும் வாக்களித்திருந்தும் சுமார் 3,270 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத நிலைமை உருவாகியது.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விலை போக வைத்துவிட்டு  கட்சித் தலைவரும், கட்சிப் பிரமுகர்களும் தனக்கு சதி செய்து விட்டார்கள் என சிறுபிள்ளைத்தனமான கருத்து தெரிவித்தது குறித்து தேர்தல் காலங்களில் அர்ப்பணிப்போடு கட்சியின் வெற்றிக்காகவும் வேட்பாளர் நஸீரின் வெற்றிக்காகவும் தேர்தல் பணிகளில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வந்த கட்சியின் அம்பாறை மாவட்ட பிரமுகர்களும் போராளிகளும் மன வேதனை அடைந்த நிலைமையில் உள்ளனர்.

நடைபெற்ற 09ஆவது பாராளுமன்ற தேர்தலில் நமது நாட்டில் பல மூத்த அரசியல்வாதிகள்  எல்லாம் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் தோல்வியடைந்தவுடன்,  ஆதரவாளர்களை அழைத்து பொறுமையாக இருக்கமாறும் இறைவனின் நாட்டத்தினை ஏற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். என்பதனை பார்த்து கேட்டு பழகவேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் வேட்பாளர் நஸீர்  தமது வீட்டுக்கு வருமாறு கட்சியின் முக்கியஸ்தர்களையும் போராளிகளையும் அழைத்து உதுமாலெப்பை அமைச்சர் அவர்களையும், தேசிய காங்கிரஸிலிருந்து முஸ்லிம் காங்கிரஸிருந்து இணைந்துகொண்ட பிரமுகர்களையும் கூட்டத்துக்கு அழைக்கவேண்டாம் என மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல் எம். ஹலிமுக்கு அறிவித்துள்ளார். கட்சிக்கு மூன்று ஆசனம் கிடைக்கவில்லை, வேட்பாளர் நஸீர் வெற்றி பெறவில்லை என்ற கவலையுடன் இருந்த பிரமுகர்களையும், போராளிகளையும் அழைத்து கட்சி தலைவர்தான் எனது தோல்விக்கு முதலாவது காரணம் என தெரிவித்துள்ளார்.

Read:  மீண்டும் ரணில் !!

கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மத்திய குழுவின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தவறான வீண் பழியான இச் செய்தி குறித்து இன்று வரை கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், மத்திய குழு உறுப்பினர்களும் வாய் திறந்து கருத்து தெரிவிக்க முடியாத ஊமைகளாக இருந்து வருகின்றனர். இது குறித்து பெறும் வேதனை அடைய வேண்டி உள்ளது.

நாம் சமூகத்துக்கெதிரான, ஊருக்கு எதிரான செயற்பாடுகளை இன்றுவரை முன்னெடுக்கவில்லை என்பதனை நமது சமூகம் நன்கறியும். தேசிய பட்டியல் மூன்று வருடங்களுக்கு வேண்டுமென்றால் கட்சியின் தேர்தல் குழு அல்லது மத்திய குழுவினைக் கூட்டி அது தொடர்பாக கலந்துரையாடியிருக்கலாம். இதனை விட்டு விட்டு மிகவும் வேதனையான கருத்துகளை தெரிவித்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும். தேசிய காங்கிரஸிலிருந்து நாங்கள் முஸ்லிம் காங்கிரஸில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்து கட்சியின் தலைமைக்கும், கட்சிக்கும் விசுவாசமாக செயற்பட்டு வருகின்றோம் என்பதனை கட்சி நன்கு அறியும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக செயற்பட்டுள்ளோம். அதைபோன்று பாராளுமன்ற தேர்தல் நவடிக்கைகளிலும் உச்ச விசுவாசத்துடன்  செயற்பட்டுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தினை வென்று மூன்று ஆசனங்களை பெறுவதற்கு முயற்சி செய்தோம். அம்பாறை மாவட்டத்தினை பொதுஜன பெரமுன மூன்று ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தினையும், தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்று மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளோம். ஆனாலும் மாவட்டத்தில் தோல்வி அடைந்துள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வாக்கு பலத்தில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. 78 ஆயிரம் வாக்குகளை முஸ்லிம் காங்கிரசும், 43 ஆயிரம் வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசும், தேசிய காங்கிரஸ் 39 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. இந்நிலைமையில் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி  தொடர்பாக நாம் எல்லோரும் முயற்சி செய்து நமது வாக்கு பலத்தினை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம். நடைபெற உள்ள மாகாணசபை தேர்தலிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து      போட்டியிடா விட்டால் பொதுத்தேர்தலில் ஏற்பட்ட அதே நிலைமைதான் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

எப்போதும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைக் கொண்ட சம்மாந்துறை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அல்லது  சொற்ப வாக்கினால் தோல்வியடைந்த குருநாகல் மாவட்டத்தின் எமது சாகோதரா் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர்கள் அமைதியாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அல்லது, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூலம் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதியை கேட்காமல் இருக்கின்ற இவ்வேளையில்  இவரின் இச்செயற்பாடு மனவேதனையை ஏற்படுத்துகின்றது.

நாம் இழந்த பாராளுமன்ற பிரதிநிதி கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் காங்கிரஸின் பலத்தினை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் ஒற்றுமை படுவதனால்தான் நமது அடையாளங்களை பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

SOURCE( ஏ.சி. ரிசாத்) JaffnaMuslim